Last Updated : 12 Apr, 2025 09:15 AM

9  

Published : 12 Apr 2025 09:15 AM
Last Updated : 12 Apr 2025 09:15 AM

வழிக்கு வந்தது அதிமுகவா, பாஜகவா? - உள்ளுக்குள் பேசியதும், ஊருக்குச் சொன்னதும்!

இபிஎஸ் உடன் அமித் ஷா

மலருமா மலராதா என ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்த அதிமுக - பாஜக கூட்டணி மலர்ந்தே விட்டது. அமித் ஷாவின் அழைப்பை ஏற்று சிரித்த முகத்துடன் வந்து செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. ஆ​னால், செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் அமித் ஷா சொன்​னதும் இந்த சந்​திப்​பின் பின்​னணி​யில் நடந்​திருப்​பதும் வெவ்​வேறானது என்று விவரம் அறிந்த வட்​டாரத்​தினர் சொல்​கி​றார்​கள். இது ஒன்​றும் தெரி​யாத ரகசி​ய​மும் இல்லை என்​றும் அவர்​களே சொல்கிறார்​கள்.

முன்​ன​தாக டெல்​லி​யில் அமித் ஷாவை சந்​தித்த போதே, அண்​ணா​மலையை மாற்ற வேண்​டும், தமி​ழ​கத்​தில் அதி​முக தலை​மை​யில் தான் கூட்​டணி இருக்க வேண்​டும், கூட்​டணி ஆட்சி என்​ப​தைப் பற்றி எல்​லாம் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு பேசிக்​கொள்​ளலாம் என மூன்று முக்​கிய நிபந்​தனை​களை விதித்​திருந்​தார் இபிஎஸ்.

இதற்கு சம்​மதம் என்​றால் மட்​டுமே அமித் ஷாவை மறு​படி​யும் சந்​திக்க முடி​யும் என்​றும் அழுத்​த​மாக சொல்லி இருந்​தது அதி​முக தரப்​பு. நேற்று மதி​யம் இதுகுறித்து முக்​கிய நிர்​வாகி​களு​டன் ஒரு சுற்று ஆலோ​சனை நடத்​திய பிறகே அமித் ஷாவை சந்​திக்​கப் புறப்​பட்​டார் இபிஎஸ்.

அதன்​படியே, தான் விதித்த நிபந்​தனை​களை எல்​லாம் ஏற்​றுக் கொண்டு அமித் ஷாவை வழிக்கு வரவைத்து சாதித்​திருக்​கி​றார் இபிஎஸ். செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு முடிந்து கிளம்​பும் போது இபிஎஸ்​ஸிடம் செய்​தி​யாளர்​கள் கேள்வி கேட்க முற்​பட்ட போது உடனிருந்த எஸ்​.பி.வேலுமணி அதை நாசூக்​காக தவிர்த்​து, “இப்​போதைக்கு எது​வும் பேசவேண்​டாம். எது​வாக இருந்​தா​லும் பிறகு பேசிக் கொள்​ளலாம்” என்று சொல்லி இபிஎஸ்ஸை நகர்த்​திச் சென்​று​விட்​டார்.

அமித் ஷாவுட​னான சந்​திப்பு முடிந்​ததும் நேற்று இரவு தனது வீட்​டில் அதி​முக முக்​கிய நிர்​வாகி​கள் சிலருக்கு விருந்​துக்கு ஏற்​பாடு செய்​திருந்த இபிஎஸ், அது சமயம் திமுக அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் மீதான ஊழல் வழக்​கு​களை விரைவுபடுத்தி விசா​ரிக்க நடவடிக்கை எடுப்​பது குறித்து விரி​வாகப் பேசி​ய​தாகச் சொல்​கி​றார்​கள். இந்த விஷ​யத்​தில் உரிய நடவடிக்​கையை உடனே எடுக்க பாஜக தலை​மையை வலி​யுறுத்​து​வது என அப்​போது முடி​வெடுத்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

பாஜக-வை தாங்​கள் இழுத்த இழுப்​புக்கு வரவைத்து விட்​ட​தாக அதி​முக தரப்​பில் தம்ஸ் அப் காட்​டி​னாலும் கூட்​டணி பேச்​சு​வார்த்தை விஷ​யத்​தில் பாஜக-​வின் கையே ஓங்கி இருப்​ப​தாக விவரம் அறிந்த வட்​டாரத்​தில் சொல்​கி​றார்​கள். தொகு​தி​கள் எண்​ணிக்​கை, கூட்​டணி அமைச்​சரவை என பாஜக-​வும் தன் பங்​கிற்கு அதி​முக-வுக்கு ஏகப்​பட்ட டிமாண்​டு​களை வைத்​திருக்​கிறது. அதையெல்​லாம் இப்​போதே வெளிப்​படுத்​தி​னால் அதி​முக-வுக்​குள் கலகம் பிறக்​கலாம் என்​ப​தால், “அதுபற்றி எல்​லாம் பிறகு பேசப்​படும்” என ஒற்றை வரி​யில் முடித்​து​விட்​டார் அமித் ஷா.

ஆனால், இந்த விஷ​யத்​தில் பாஜக-​வின் நிபந்​தனை​கள் என்ன என்​பது இபிஎஸ்​ஸுக்கு தெரி​யும். இருந்​தா​லும் இந்​தத் தேர்​தல் தனக்கு வாழ்வா சாவா போராட்​டம் என்​ப​தா​லும் தனது கவுர​வத்​தைக் காப்​பாற்​றிக் கொள்​ள​வும் வேறு சில விஷ​யங்​களில் பாஜக-வுடன் காம்ப்​ரமைஸ் ஆகி​விட்​டார் இபிஎஸ் என்​கி​றார்​கள். அதேசம​யம், ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்​ளிட்​ட​வர்​களை மீண்​டும் அதி​முக-வுக்​குள் கொண்​டு​

வ​ரு​வது குறித்​தும் அமித் ஷா தரப்​பில் பேசப்​பட்​டுள்​ளது. ஆனால், அதற்கு பிடி​கொடுக்​காத இபிஎஸ், “முதலில் கூட்​ட​ணியை அறி​விப்​போம். மற்​றவை குறித்​தெல்​லாம் பிறகு பேசிக்​கொள்​ளலாம்” என்று சொன்​ன​தாக பாஜக தரப்​பில் சொல்​கி​றார்​கள். ஆக, பிரிந்​தவர்​களை மீண்​டும் அதி​முக வுக்​குள் கொண்டு வரு​வது பற்​றி​யும் மாற்றி யோசிக்க ஆரம்​பித்​திருக்​கும் இபிஎஸ், செங்​கோட்​டையனை வைத்து குறுக்​குச் சால் ஓட்​டும் வேலை​களைச் செய்​தால் கூட்​டணி மீதான நம்​பகத் தன்மை கெட்​டு​விடும் என்​ப​தை​யும் அமித் ஷா தரப்​புக்கு புரிய​வைத்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதனிடையே, ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்​ளிட்​ட​வர்​களை ஒதுக்கி வைத்​திருப்​ப​தால் அதி​முக மீது தேவரினத்து மக்​கள் கோபத்​தில் இருக்​கி​றார்​கள். அதை சரிசெய்​யவே அவர்​கள் மூவரை​யும் கட்​சிக்​குள் சேர்த்​துக் கொள்​ளச் சொல்​கி​றோம் என்று சொல்லி வரும் பாஜக, ஒரு​வேளை கடைசி வரை இபிஎஸ் அதில் பிடி​வாதம் காட்​டி​னால் அதை சமாளிக்க ஏது​வாகவே தேவரினத்​தைச் சேர்ந்த நயி​னார் நாகேந்​திரனை மாநில தலை​வ​ராக்கி இருப்​ப​தாக​வும் இப்​போது பேச ஆரம்​பித்​திருக்​கிறார்​கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x