Published : 08 Apr 2025 04:45 AM
Last Updated : 08 Apr 2025 04:45 AM

ரயில்வே ஓட்டுநர் பணி தொடர்பாக ஆய்வு செய்ய கோரிக்கை

சென்னை: ரயில் ஓட்​டுநரின் பணி தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவின்டி ​தாமதிக்காமல் ஆய்வு செய்ய வேண்​டும் என்று ரயில் ஓட்​டுநர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். வார ஓய்வு உட்பட பல்​வேறு கோரிக்​கைளை வலி​யுறுத்தி ரயில் ஓட்​டுநர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதைத் தொடர்ந்​து, இது தொடர்​பாக ஆய்வு செய்ய பல்​வேறு விஷ​யங்​களுக்​கான ஒழுங்​கு​முறை குழுவை ரயில்வே வாரி​யம் கடந்த ஆண்டு அமைத்​தது.

இந்​நிலை​யில், ரயில் ஓட்​டுநரின் பணி தொடர்​பாக ஆய்வு செய்ய வேண்​டும் என்று கோரிக்கை எழுந்​துள்​ளது. இதுகுறித்​து, ரயில் ஓட்​டுநர்​கள் கூறிய​தாவது: ரயில் ஓட்​டுநரின் பணி நேரம், ஓய்வு ஆகிய குறை​களை முக்​கி​ய விஷய​மாக இந்த குழு பார்க்​க​வில்​லை. ரயில் ஓட்​டுநர் உடல்​நலம் மற்​றும் ரயில்வே பாது​காப்பு ஆகிய​வற்றை உறுதி செய்​வதற்கு ரயில் ஓட்​டுநர்​களின் குறை​களுக்கு தீர்வு காண வேண்​டும்.

மேலும், சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட பிறகும் (3 ஆண்​டு​களுக்கு மேல் ஆகிறது) ரயில் ஓட்​டு நரின் பணி தொடர்​பாக ஆய்வு செய்​யப்​பட​வில்​லை. இதை மேற்​கொள்​ளாமல் ரயில் ஓட்​டுநரின் வேலை பளுவை நிர்​ண​யம் செய்ய முடி​யாது. இதுதொடர்​பாக அறி​வியல் பூர்​வ​மாக ஆய்வு நடத்த வேண்​டும். கோரிக்​கைகள் தொடர்​பாக, அகில இந்​திய ஓடும் தொழிலா​ளர்​கள் சங்​கம் சார்​பில் ரயில்​வேக்கு மனு அனுப்​பி உள்​ளோம்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x