Published : 08 Apr 2025 04:36 AM
Last Updated : 08 Apr 2025 04:36 AM
சென்னை: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்கள் இயங்குகின்றன.
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி, இந்த 4 இறைச்சிக் கூடங்களும் ஏப்.10-ம் தேதி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT