Published : 03 Apr 2025 06:27 AM
Last Updated : 03 Apr 2025 06:27 AM

கோடை காலத்தை சமாளிக்க பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நீர்மோர்

சென்னை: கோடை​காலத்தை சமாளிக்க பேருந்து ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு நீர்​மோர், ஓ.ஆர்​.எஸ் கரைசல் மற்​றும் சுத்​தி​கரிக்​கப்​பட்ட குடிநீர் வழங்​கு​வதை, சென்​னை​யில் போக்​கு​வரத்து அமைச்​சர் சிவசங்​கர் நேற்று தொடங்கி வைத்​தார்.

தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழக பேருந்​துகளில் ஆன்​-லைன் மூலம் முன்​ப​திவு செய்து பயணிக்​கும் பயணி​களை ஊக்​குவிக்​கும் வகை​யில், கடந்த ஆண்டு நவ.21-ம் தேதி முதல் நடப்​பாண்​ டில் ஜன.20-ம் தேதி வரை பயணம் செய்த பயணி​கள் குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யப்​பட்​டு, பரிசுகள் வழங்க முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்​படி புதுக்​கோட்​டையைச் சேர்ந்த கே.​விஷால் என்​பவருக்கு ஸ்கூட்​டரை​யும், மதுரையைச் சேர்ந்த ஜெ.மணி​கண்​டன் என்​பவருக்கு எல்​. இ.டி. டி.​வி.யை​யும் சென்னை பல்​ல​வன் சாலை​யில் உள்ள மத்​திய பணிமனை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், போக்​கு​வரத்​துத்​துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் வழங்​கி​னார்.

இதைத் தொடர்ந்​து, ஓட்​டுநர், நடத்​துநர்​களுக்கு கோடை​காலத்தை சமாளிக்க தின​மும் நீர்​மோர், ஓ.ஆர்​.எஸ். கரைசல் மற்​றும் சுத்​தி​கரிக்​கப்​பட்ட குடிநீர் வழங்​கு​வதை​யும் அமைச்​சர் தொடங்கி வைத்​தார்.

மத்​திய பணிமனை​யில் ஓட்​டுநர்​கள், நடத்​துநர்​கள் ஓய்வு எடுப்​ப​தற்கு ஏ.சி. அரங்​கத்​தை​யும் திறந்து வைத்​தார். நிகழ்ச்​சி​யில், போக்​கு​வரத்​துத்​துறை கூடு​தல் தலை​மைச் செயலா​ளர் க.பணீந்​திரரெட்​டி உள்​ளிட்ட அதி​காரி​கள்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x