Published : 03 Apr 2025 08:11 AM
Last Updated : 03 Apr 2025 08:11 AM

சின்னக் கவுண்டரா...  பெரிய கவுண்டரா..? - அமித் ஷா நடத்தும் ‘அதிரடி பாலிடிக்ஸ்’!

கொங்கு மண்டலத்தின் பெரிய கவுண்டரான பழனிசாமியையும் சின்னக் கவுண்டரான அண்ணாமலையையும் வைத்து அமித் ஷா ஆடத் தொடங்கி இருக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் தான் இப்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக இருக்கிறது!

தமி​ழ​கத்​தில் திமுக ஆட்​சியை அகற்​றியே தீர வேண்​டும் என்ற ஒற்​றைத் தீர்​மானத்தை கையில் எடுத்​திருக்​கும் பாஜக தலைமை அதற்​கான பொறுப்பை வழக்​கம் போல அமித் ஷாவிடம் ஒப்​படைத்​துள்​ளது. அதன்​படி, வழக்​கு​கள் மூலம் திமுக வட்​டத்தை கலங்​கடிக்​கத் தயா​ராகி வரும் அமித் ஷா, அதற்கு முன்​ன​தாக திமுக-வை வீழ்த்​து​வதற்​கான பாஜக அணியை வலுப்​படுத்​தும் வேலை​களை​யும் வேகப்​படுத்தி இருக்​கி​றார்.

இதன் முதல்​கட்​ட​மாக, வரு​மான​வரித் துறை சோதனை, இரட்டை இலை விவ​காரம், கட்​சிக்​குள் அதிருப்தி உள்​ளிட்ட காரணங்​களை முன் நிறுத்தி அமித் ஷா கடந்த வாரம் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு அதிரடி​யாக ‘சம்​மன்’ அனுப்​பி​னார். உடனே டெல்​லிக்​குப் புறப்​பட்​டார் பழனி​சாமி. அமித் ஷா உடனான சந்​திப்​பில் கூட்​ட​ணிக்கு உடன்​படு​வ​தாக ஒத்​துக்​கொண்ட பழனி​சாமி, இப்​போதைக்கு இதை வெளிப்​படுத்த வேண்​டாம் என்று கேட்​டுக் கொண்​ட​தாகத் தெரி​கிறது.

அதி​முக தலை​மை​யில்​தான் கூட்​ட​ணி, ஓபிஎஸ், டிடி​வி. தினகரன், சசிகலா ஆகியோரை கட்​சிக்​குள் சேர்க்​கும் படி நிர்​பந்​திக்​கக் கூடாது, பாஜக-வுக்​கான பங்​கீட்​டில் அவர்​களைச் சேர்த்​துக் கொள்​வ​தில் தங்​களுக்கு ஆட்​சேபனை இல்லை என்​பது உள்​ளிட்ட தன் தரப்பு நிபந்​தனை​களை​யும் அமித் ஷாவுக்கு பழனி​சாமி கோரிக்​கை​யாக வைத்​த​தாகச் சொல்​லப்​படு​கிறது.

இந்​தச் சந்​திப்பு முடிந்த அடி மறைவதற்​குள் தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை​யும் டெல்​லிக்கு அழைக்​கப்​பட்​டார். டெல்​லி​யில், அதி​முக-வுடன் இணக்​க​மாகச் செல்​லும்​படி அவருக்கு அறி​வுறுத்​தப்​பட்​ட​தாக தெரி​கிறது. அதேசம​யம், கடந்த 4 ஆண்​டு​களில் தமி​ழ​கத்​தில் பாஜக-​வின் வளர்ச்சி குறித்து புள்ளி விவரங்​களை அடுக்​கிய அண்​ணா​மலை, தமிழக பொறுப்​பாள​ரும், பாஜக தேசிய பொதுச்​செய​லா​ள​ரு​மான பி.எல்​.சந்​தோஷ் நியமித்த சர்வே டீம் எடுத்த சர்வே ரிப்​போர்ட் படி அதி​முக-​வின் வாக்கு வங்கி சரிந்​துள்ள விஷ​யத்​தை​யும் அமித் ஷாவுக்கு தெளிவுபடுத்​தி​ய​தாகச் சொல்​கி​றார்​கள்.

இறு​தி​யாக, பழனி​சாமி தமி​ழ​கம் தழு​விய தலை​வ​ராக இல்​லாத​தால் அவரை முன்​னிறுத்தி தேர்​தலைச் சந்​திப்​பது எதிர்​பார்த்த பலனைத் தராது என்ற தனது கருத்​தை​யும் அவர் தைரிய​மாக எடுத்​துச் சொன்​ன​தாகச் சொல்​லப்​படு​கிறது. ஆனால், இத்​தனைக்​கும் பிறகும் அதி​முக கூட்​டணி குறித்து அமித் ஷா தரப்​பில் அண்​ணா​மலைக்கு சில அட்​வைஸ்​கள் தரப்​பட்​ட​தாம்.

அனைத்​தை​யும் கேட்​டுக் கொண்டு தமி​ழ​கம் திரும்​பிய அண்​ணா​மலை, “கூட்​டணி விஷ​யத்​தில் எனது நிலைப்​பாட்​டில் எந்த மாற்​ற​மும் இல்​லை... தொண்​ட​னாக இருக்​க​வும் தயா​ராக இருப்​ப​தாக டெல்​லி​யில் கூறி இருக்​கிறேன்” என்​றெல்​லாம் பேட்​டியளித்​தார்.

அதி​முக கூட்​டணி சரிப்​பட்டு வராது என அண்​ணா​மலை அமித் ஷாவுக்கு தெளிவுபடுத்​தி​விட்​டார். இதை​யும் மீறி அதி​முக உடன் கூட்​டணி வைக்க பாஜக தலைமை முடி​வெடுத்​தால் மாநில தலை​வ​ராக அண்​ணா​மலை நீடிக்க முடி​யாது. இதைத்​தான் அண்​ணா​மலை பூடக​மாக பேட்​டி​யில் சொல்லி இருக்​கி​றார் என்​கி​றார்​கள் அரசி​யல் நோக்​கர்​கள்.

ஒரு​வேளை, அண்​ணா​மலை​யின் கருத்தை ஏற்​றுக்​கொண்​டால், செங்​கோட்​டையன், வேலுமணி உள்​ளிட்​ட​வர்​களை வைத்து பழனி​சாமியை ஓரங்​கட்​டி​விட்டு மற்​றவர்​களை எல்​லாம் சேர்த்​துக் கொண்டு புதிய கூட்​ட​ணியை கட்​டமைக்​கும் பி பிளானை​யும் டெல்லி கைவசம் வைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது ஒரு​புறமிருக்க, அண்​ணா​மலை மாற்​றப்​பட்​டால் தலை​வர் பதவியை பிடிக்க தமிழக பாஜக-​வில் பலரும் பலவித கணக்​கு​களு​டன் காத்​திருக்​கி​றார்​கள். அதில் முதல் நபராக, அதி​முக-​விலிருந்து வந்த நயி​னார் நாகேந்​திரன் அதையே தனக்​கான ப்ளஸ் பாயின்​டாக வைத்து காய் நகர்த்​துகி​றார்.

அண்​ணா​மலை நீக்​கத்​தால் கொங்கு மண்​டலத்​தில் ஏற்​படும் சரிவை தங்​களால் ஈடு​கட்ட முடி​யும் என வானதி சீனி​வாசன் தரப்பும் மோதுகிறது. நாடார் சமு​தாய மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அதி​முக-வுக்கு வாக்கு வங்கி சரிந்​திருப்​ப​தால் அதை தங்களால் பாஜக பக்​கம் திருப்ப முடி​யும் என பொன்​னாரும் தமி​ழிசை​யும் நம்​பிக்கை கொடுக்​கி​றார்​களாம்.

அதேசம​யம், தமி​ழ​கத்​தில் பாஜக-வுக்கு வலு​வான அடித்​தளம் அமைத்​துக் கொடுத்த அண்​ணா​மலையை சூழ்​நிலை காரண​மாக தலை​வர் பதவியி​லிருந்து மாற்​றி​னாலும் அவருக்கு மத்​திய அமைச்​சர் பதவி அல்​லது தேசிய அளவி​லான பொறுப்​பைத் தர வேண்​டும் என்​ப​தி​லும் பாஜக தலை​மை​யும் அமித் ஷாவும் தெளி​வாக இருக்​கி​றார்​களாம். ஆக, அமித் ஷா ஆடும் இந்த அரசி​யல் சதுரங்​கத்​தில் சாயப் போவது பெரிய கவுண்​டர் பழனி​சாமியா சின்​னக் கவுண்​டர் அண்​ணா​மலையா என்​பதை பொறுத்​திருந்து தான் பார்க்க வேண்​டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x