Published : 28 Mar 2025 07:30 PM
Last Updated : 28 Mar 2025 07:30 PM
ஆம்பூர்: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையிலும் மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய வக்பு வாரிய சட்டத் திருந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்க வந்த இஸ்லாமியர்கள் கையில் கருப்பு பேட்ச் அணிந்து, மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழுகைக்கு வரும் அனைத்து இஸ்லாமியர்கள் கையில் கருப்பு பேட்ச் அணிந்து வர வேண்டுமென அழைப்பு விடுத்தனர். அதன் அடிப்படையில் ஆம்பூரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களிலும், வாணியம்பாடியில் உளள 30-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த சிறப்புத் தொழுகையில் 30,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கையில் கருப்புப் பேட்ச் அணிந்து கொண்டு சிறப்பு தொழுகையில் இன்று ஈடுபட்டனர்.
கருப்பு பேட்ச் அணியாமல் வந்த இஸ்லாமியர்களுக்கு பள்ளி வாசல்களின் நுழைவு வாயிலில் கருப்பு பேட்ச் அணிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT