Last Updated : 12 Mar, 2025 09:57 AM

 

Published : 12 Mar 2025 09:57 AM
Last Updated : 12 Mar 2025 09:57 AM

“நாளைய கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!” - புதுச்சேரி காங். தலைவர் வைத்திலிங்கம் ஆருடம்

இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் புதுச்சேரியில் காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் இடையில் அண்மைக்காலமாக உறவு அத்தனை சுமுகமாக இல்லை. அண்மையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா, “இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய திமுக தயாராய் இல்லை.

2026-ல் 20 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று காங்கிரஸை மறைமுகமாக சீண்டி இருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான வைத்திலிங்கம் எம்பி-யிடம் பேசினோம். இனி அவரது பேட்டி..

20 தொகு​திகளை கேட்​டுப் பெறு​வோம், தனித்து என்​றால் 30 தொகு​தி​களில் போட்​டி​யிடு​வோம் என்று திமுக திடீரென சொல்ல காரணம் என்ன?

நாங்​கள் எங்​கள் கட்​சியை வளர்க்​கி​றோம். திமுக அவர்​கள் கட்​சியை வளர்க்​கின்​ற​னர். நாங்​கள் 30 தொகு​தி​களில் நிற்க விரும்​பி​னால், அவர்​களும் 30 இடங்​களில் நிற்க விரும்​பு​வார்​கள். அதில் ஒன்​றும் பிரச்​சினை இல்​லை. இரண்டு கட்​சிகளும் வலு​வாக இருந்​தால்​தான் தேர்​தலைச் சந்​திக்க முடி​யும். ஆகவே கட்​சியை வலுப்​படுத்​து​வ​தில் எந்​தத் தவறும் இல்​லை. அதேசம​யம், நாளைக்கே தேர்​தல் வரப்​போவ​தில்​லை.

இப்​போதைக்கு எங்​களு​டைய வேலை கட்​சியை வளர்க்​கும் பணி​தான். அதன்​படி நாங்​கள் கட்​சியை வளர்த்​துக்​கொண்​டிருக்​கி​றோம். ஏற்​கெனவே 15 தொகு​தி​களில் நிர்​வாகி​கள் கூட்​டம் போட்​டுள்​ளோம். தொடர்ந்து கூட்​டங்​களை நடத்தி வரு​கின்​றோம். பாத​யாத்​திரை, பொதுக்​கூட்​டம் போன்​றவற்​றை​யும் நடத்தி வரு​கி​றோம்.

ஓடாத வண்டி என சிவா சுட்​டிக்​காட்​டியது காங்​கிரஸைத்​தா​னா?

ஓடாத வண்டி என்று முதல்​வர் ரங்​க​சாமியை சொல்​லி​யிருக்​கலாம். இந்த அரசாங்​கத்தை நம்பி நம்​மால் பயணம் செய்ய முடி​யாது. அவர்​களை எதிர்த்​துத்​தான் நிற்க வேண்​டும் என்​பது அவரின் கருத்​தாக இருக்​கலாம்.

புதுச்​சேரி​யில் காங்​கிரஸ் - திமுக கூட்​டணி ஒற்​றுமை​யுடன் இருக்​கிற​தா?

இரு கட்​சிகளும் அவர​வர் வேலை​களை பார்க்​கி​றோம். கட்சி மேலிடம் சொல்​லும் பணி​களை செய்​கி​றோம். நாங்​கள் கூட்​டணி குறித்து சிந்​திக்​கவே இல்​லை. தேர்​தலைப் பற்​றி​யும் பேசவே இல்​லை. இண்​டியா கூட்​டணி சார்​பில் ஏதே​னும் அறி​வுறுத்​தல்​கள் வந்​தால் அந்த நேரத்​தில், இண்​டியா கூட்​டணி கூட்​டத்தை நடத்தி அதற்​குண்​டான நடவடிக்​கையை எடுப்​போம். அது​வரை எங்​களு​டைய பணி​களைச் செய்து கொண்​டிருப்​போம்.

2026-ல் எதனை தொகு​தி​களில் காங்​கிரஸ் போட்​டி​யிட உத்​தேசம்?

நாளைய கூட்​டணி எப்​படி வேண்​டு​மா​னாலும் இருக்​கலாம். இல்​லாமலும் போகலாம். அது நமக்கு தெரி​யாது. ஆகவே, 30 தொகு​தி​களை​யும் வலுப்​படுத்​துகி​றோம். தேர்​தலில் காங்​கிரஸ் நிற்​கும் தொகு​தி​கள் வலு​வாக இருக்​கும். கூட்​டணி கட்​சிகளுக்​கும் அது வலு சேர்க்​கும். நம்​முடைய நோக்​கமே பாஜக கூட்​டணி ஆட்​சியை புதுச்​சேரி​யில் இருந்து அகற்ற வேண்​டும். மக்​களுக்கு நல்​லது செய்​யக்​கூடிய ஆட்​சியை கொண்டு வர வேண்​டும் என்​பது தான். அதற்கு உண்​டான பணி​களை நாம் செய்து வரு​கின்​றோம்.

என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​டணி அரசின் செயல்​பாடு​கள் எப்​படி உள்​ளது?

அவலத்​தின் உச்​ச​மாக இருக்​கிறது ரங்​க​சாமி ஆட்​சி​யின் நிர்​வாகம். இங்கு பாஜக இரண்டு பிரி​வாக உள்​ளது. ஒன்​று, ரங்​க​சாமி பாஜக, மற்​றொன்​று, மார்​ட்டின் பாஜக. மோடி பாஜக இங்கு இல்​லை. இதுகுறித்து நானும் நாராயண​சாமி​யும் புதுச்​சேரி மக்​களுக்கு மேடை போட்டு எடுத்​துச் சொல்லி வரு​கி​றோம். மக்​களும் அனைத்​தை​யும் பார்த்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள்.

பாஜக - என்​.ஆர்​.​காங்​கிரஸ் கூட்​ட​ணி​யானது தேர்​தலில் எத்​தகைய தில்​லு​ முல்​லுகளைச் செய்​யும் அதை எப்​படிச் சமாளிக்க வேண்​டும் என்​பது குறித்​தும் தொகுதி வாரி​யாக எங்​கள் கட்​சி​யினர் மத்​தி​யில் விழிப்​புணர்வை ஏற்​படுத்தி வரு​கி​றோம்.

மஹா​ராஷ்டி​ரா, ஹரி​யாணா, டெல்லி தேர்​தல்​களில் அரங்​கேற்​றிய முறை​கேடு​களை கட்​சி​யினருக்கு விரி​வாக எடுத்​துச் சொல்லி இங்​கும் அது​போன்ற முறை​கேடு​கள் நடக்க வாய்ப்​பிருப்​ப​தால் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும் என வலி​யுறுத்தி வருகிறோம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x