Last Updated : 11 Mar, 2025 09:33 AM

2  

Published : 11 Mar 2025 09:33 AM
Last Updated : 11 Mar 2025 09:33 AM

எங்கே செல்லும்  தேமுதிக பாதை? - கைவிரித்த அதிமுக... கலக்கத்தில் கேப்டன் கட்சி!

2021-ல் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி என அனைத்துக் கட்சிகளும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கைகோத்து தனி அணி கண்டன. அப்போது ஓடோடி வந்து அதிமுக-வுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சி தேமுதிக. அப்படி இக்கட்டான நேரத்தில் தங்களுக்கு தோள் கொடுத்த தேமுதிக-வை தற்போது மிக எளிதாக ஒதுக்கித் தள்ள துணிந்திருக்கிறது அதிமுக தலைமை.

நெருக்​கடி​யான நேரத்​தில் நேசக்​கரம் நீட்​டிய தங்​களுக்கு மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியை அதி​முக விட்​டுக் கொடுக்​கும், 2026-ல் கவுர​வ​மான எண்​ணிக்​கை​யில் தொகு​தி​களை ஒதுக்​கு​வார்​கள் என்​றெல்​லாம் கடந்த ஓராண்​டாக மலை​போல் நம்​பிக் கொண்​டிருந்த தேமு​தி​க-வுக்கு ஷாக் ட்ரீட்​மென்ட் கொடுத்​தது போல், “நாங்​கள் எப்​போது அவர்​களுக்கு ராஜ்யசபா சீட் தரு​வ​தாகச் சொன்​னோம்?” என்று கேள்வி எழுப்பி இருக்​கி​றார் எடப்​பாடி பழனி​சாமி.

பாஜக-வுடன் இனி எந்​தக் காலத்​தி​லும் கூட்​டணி இல்​லவே இல்லை எனச் சொல்​லிக் கொண்​டிருந்த பழனி​சாமி​யின் போக்​கில் அண்​மைக் கால​மாக மாற்​றம் தெரி​கிறது. திமுக-வை தவிர தங்​களுக்கு யாரும் எதிரி இல்லை என்ற ரீதி​யில் அவர் பேச ஆரம்​பித்​திருப்​பது பாஜக கூட்​ட​ணிக்​கும் நாங்​கள் தயா​ராக இருக்​கி​றோம் என்​ப​தற்​கான சமிக்ஞை தான் என்​கி​றார்​கள்.

கூட​வே, அன்​புமணிக்கு ராஜ்யசபா சீட் தரு​வது குறித்து அதி​முக தரப்​பில் பாஸிட்​டீ​வாக பேசிக் கொண்​டிருப்​ப​தாக​வும் ஒரு பேச்சு ஓடு​கிறது. இதெல்​லா​மும் தான் பழனி​சாமியை தேமு​தி​க-வுக்கு கைவிரிக்க வைத்​திருக்​கிறது.

பழனிசாமியின் இந்த அதிரடி முடிவை சகித்​துக் கொண்டு தேமு​திக இனி​யும் அதி​முக கூட்​ட​ணி​யில் தொடர்​வது சாத்​தி​யமில்​லாத விஷய​மாகவே பேசப்​படு​கிறது. தேமு​தி​க-வுக்​கான அடுத்த சாய்ஸ் திமுக கூட்​ட​ணி​யாகத்​தான் இருக்க முடி​யும். ஆனால், ஏற்​கெனவே திமுக கூட்​ட​ணி​யில் கட்​சிகள் நிரம்பி வழி​வ​தால் அங்கே தேமு​திக கேட்​கும் தொகு​தி​கள் கிடைக்​குமா என்​பதும் கேள்விக்​குறி.

திமுக-​வும் இல்​லாத பட்​சத்​தில் தேமு​தி​க-வுக்கு இருக்​கும் ஒரே வாசல், கூட்​ட​ணிக்​குத் தயா​ராக இருக்​கும் தவெக தான். தங்​களை நம்பி வரும் கட்​சிகளுக்கு உரிய முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படும் என்று தவெக முன்​கூட்​டியே அறி​வித்​திருப்​ப​தால் அந்​தக் கட்​சி​யுடன் கூட்​டணி வைப்​பது தேமு​தி​க-வுக்கு எளி​தாகவே இருக்​கும். ஆனால், அதற்கு தயா​ராக இருக்​கி​றாரா பிரேமலதா என்​றால் அது​வும் சந்​தேகம்​தான்.

2021 சட்​டமன்​றத் தேர்​தலில் அமமுக-வுடன் கூட்​டணி வைத்து தாராள​மாக 60 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட தேமு​திக, ஒரு இடத்​தி​லும் வெற்​றி​பெற முடிய​வில்​லை. அப்​படி இருக்​கை​யில், புதிய வரவான விஜய் கட்​சி​யுடன் கூட்​டணி வைத்​தால் அது எந்​தளவுக்கு தங்​களுக்கு சாத்​தி​ய​மாகும் என்ற கவலை​யும் தேமு​தி​க-வுக்கு இருக்​கிறது. இதனால், 2019 மக்​கள​வைத் தேர்​தலைப் போல 2026-ல் பாஜக கூட்​ட​ணி​யில் இடம்​பெற பாஜக தலை​மை​யிடம் பிரேமலதா தனது விருப்​பத்​தைத் தெரிவிக்​கலாம்.

இது சாத்​தி​ய​மா​னால், “நாங்​கள் அதி​முக கூட்​ட​ணி​யில் இல்​லை; பாஜக கூட்​ட​ணி​யில் இருக்​கி​றோம்” எனச் சொல்​லிக்​கொள்​ளலாம். தற்​போதைய சூழலில் திமுக கூட்​ட​ணிக்கு எதி​ராக அதி​முக, பாமக, தமா​கா, ஐஜேகே, புதிய நீதிக்​கட்​சி, அமமுக ஆகிய கட்​சிகளை ஒருங்​கிணைத்து வலு​வான கூட்​ட​ணியை உரு​வாக்​கும் முயற்​சி​யில் இருக்​கிறது பாஜக.

இது கைகூடி​னால் கட்​சி​யின் எதிர்​கால நலன் கருதி இந்​தக் கூட்​ட​ணி​யில் இடம்​பிடிக்​கவே பிரேமலதா பிர​யத்​தனம் செய்​வார் என்​கி​றார்​கள் அரசி​யல் நோக்​கர்​கள். ஆக, அதி​முக முடி​வால் திரிசங்கு நிலைக்கு தள்​ளப்​பட்​டு​விட்ட தேமு​தி​க-​வின் அரசி​யல் எதிர்​காலம் கூட்​டணி குறித்து பிரேமலதா எடுக்​கப் போகும் புத்​தி​சாலித்​தன​மான முடி​வில் இருக்​கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x