Published : 11 Mar 2025 12:36 AM
Last Updated : 11 Mar 2025 12:36 AM

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: ​நா​டாளு​மன்​றத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தமிழக எம்​.பி.க்​கள் குறித்து பேசி​யதற்கு தமிழக காங்​கிரஸ் தலை​வர்செல்​வப்பெருந்​தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

செல்​வப்பெருந்​தகை: நாடாளு​மன்​றத்​தில், தமிழக மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நாடளு​மன்ற உறு​ப்பினர்​களை அநாகரீக​மாக மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பேசி​யிருப்​பது வன்​மை​யாக கண்​டிக்​கத்தக்​கது. வாக்​களித்து தேர்ந்​தெடுத்த ஒட்டு மொத்த தமிழக மக்​கள் குறித்து தான் இவ்​வகை​யில் பேசி​யுள்​ளார். பாஜக​வினர் கொண்​டு​வரும் அனைத்து மக்​கள் விரோத திட்​டங்​களை, தமிழகத்​தின் நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் கேள்வி கேட்​ப​தால் அதை பொறுத்​துக்​கொள்ள முடி​யாமல் வாய்க்கு வந்​தததை பேசுகின்​றனர். உரிய நேரத்​தில் மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்​பார்​கள்.

பெ.சண்முகம்: தமிழ்நாட்டின் நிதி உரிமை, கல்வி உரிமையை மறுப்பதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். தமிழக எம்.பி.க்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அமைச்சர், தமிழக மக்கள் பிரதிநிதிகளை நாகரீகமற்றவர்கள் என்று ஆணவமாக பேசியுள்ளார். பலதரப்பு கண்டனத்துக்கு பிறகு இந்தப் பேச்சை அவர் திரும்பப் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் தனது ஆணவப் போக்குக்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x