Published : 03 Mar 2025 09:23 AM
Last Updated : 03 Mar 2025 09:23 AM

“முன்னும் பின்னும் எடிட் பண்ணிட்டு கேட்டா மிரட்டுற மாதிரி தான் இருக்கும்!” - தருமபுரி தர்மச்செல்வன் தன்னிலை விளக்கம்

“நான் சொல்வதை கலெக்டர், எஸ்பி கேட்க வேண்டும். நான் சொல்வதைத்தான் அனைத்து நிர்வாகங்களும் கேட்க வேண்டும். இங்கே கேம் ஆட இடம் கிடையாது. ஆடினால் அவன் கதை முடிந்தது” - திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் (பொறுப்பு) தர்மச்செல்வன் பேசிய இந்த தாம் தூம் பேச்சு வைரலாகி, திமுக தலைமைக்கு தர்சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் குறுநில மன்னர்களைப் போல் செயல்படுவதாக அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிக்கட்சிகள் வரிந்துகட்டியுள்ளன. 27-ம் தேதி தரு​மபுரி​யில் கிழக்கு மாவட்ட திமுக-​வின் செயற்​குழு கூட்​டம் நடந்​தது.

சுமார் 25 பேர் மட்​டுமே கலந்​து​கொண்ட இந்​தக் கூட்​டத்​தில் தான் தர்​மச்​ செல்​வன் இப்​படிப் பேசி இருக்​கிறார். முன்​னாள் மாவட்ட பொறுப்​பாள​ரான பி.என்​.பி.இன்​பசேகரனுக்கு மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​ப​டாத ஆதங்​கத்​தில் அவரது ஆதர​வாளர்​களே இந்த வீடியோவை வைரலாக்கி இருக்​கிறார்​கள் என்​றும், கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்ட தடங்​கம் சுப்​பிரமணி​யின் ஆதர​வாளர்​கள் தான் இதை பரப்பி இருக்​கிறார்​கள் என்​றும் திமுக வட்​டாரத்​தில் பலவாறாக பேச்சு அடிபடு​கிறது. இந்​நிலை​யில், தர்​மச்​செல்​வனை அவசர​மாக சென்​னைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு ‘புத்தி சொல்​லி’ அனுப்பி இருக்​கிறது திமுக தலை​மை.

இது தொடர்​பாக, சென்​னை​யில் இருந்த தர்​மச்​செல்​வனிடம் பேசினோம். “எனது மாவட்​டத்​துக்​குள் பென்​னாகரம், தரு​மபுரி தொகு​தி​கள் வரு​கிறது. 2021 தேர்​தலில் பென்​னாகரத்​தில் 21 ஆயிரத்து 500 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தி​லும், தரு​மபுரி​யில் 26 ஆயிரத்து 500 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தி​லும் திமுக தோற்​றுள்​ளது. மக்​களவை தேர்​தலில் தரு​மபுரி​யில் திமுக வெற்றி பெற்​ற​போதும், பென்​னாகரத்​தில் 11 ஆயிரத்து 500 வாக்​கு​களும், தரு​மபுரி​யில் 13 ஆயிரத்து 500 வாக்​கு​களும் பாமக-வை விட திமுக-வுக்கு குறை​வாகவே கிடைத்​தது.

தரு​மபுரி​யின் 2 சட்​டப் பேரவை தொகு​தி​களில் கட்சி இப்​படி பலவீனமடைந்​துள்ள சூழலில் திமுக தலை​வர் என்னை நம்பி பொறுப்பு வழங்​கி​யுள்​ளார். 2026 தேர்​தலில் அதி​முக, பாமக, பாஜக கட்​சிகள் கூட்​டணி அமைத்​துப் போட்​டி​யிட்​டாலும் என் தொகு​தி​களின் வெற்​றியை தலை​மைக்கு சமர்ப்​பிக்க வேண்​டிய பொறுப்பு எனக்​குள்​ளது. இதை நோக்​க​மாக வைத்​துத்​தான் செயற்​குழு கூட்​டத்​தில் பேசினேன். முன்​ன​தாக, நிர்​வாகி​களின் மனக் குமுறல்​கள், கோரிக்​கைகளை பற்​றியெல்​லாம் கேட்​டேன்.

அவர்​கள், ‘கிழக்கு மாவட்​டம் முழுக்க மக்​கள் பணி செய்​ய​வும், வளர்ச்​சித் திட்​டங்​களை முன்​னெடுக்​க​வும் மாவட்ட நிர்​வாகம் தொடங்கி அனைத்து மட்​டங்​களில் உள்ள அரசு அலு​வலர்​களை திமுக நிர்​வாகி​கள் அணுகி​னாலும் உரிய மரி​யாதை கிடைப்​ப​தில்​லை. மாறாக, அதி​முக, பாமக-​வினருக்​குத் தான் அதி​காரி​கள் ஆதர​வாக இருக்​கின்​றனர்.

இதற்கு தீர்வு கண்​டால் தான் திமுக நிர்​வாகி​களின் தேர்​தல் பணி உற்​சாக​மாக இருக்​கும். புதிய பொறுப்​பாளரின் தலை​மை​யில் கட்​சி​யில் எழுச்சி ஏற்பட வேண்​டும்’ என்ற ரீதி​யில் பேசினர். அதைத் தொடர்ந்து நான் பேசும்​போது தான், ‘கலெக்​டர், எஸ்பி உள்​ளிட்ட அரசு அதி​காரி​கள் அனை​வரும் நான் சொல்​வதைத் தான் கேட்க வேண்​டும்’ என்ற ரீதி​யில் பேசினேன். அதில் கொஞ்​சம் எமோஷனலும் கூட வெளிப்​பட்​டிருக்​கும். ஆனால், அந்​தப் பேச்சு அதி​கார தோரணை​யிலோ, தவறான நோக்​கத்​திலோ பேசப்​பட்​டவை அல்ல.

முன்​னும், பின்​னும் இருப்​பதை எடிட் செய்​து​விட்டு கேட்​கும்​போது நான் மிரட்​டல் விடுப்​பது போலத்​தான் யாரும் உணர்​வர். தர்​மச்​செல்​வன் தர்​மத்தை மீறும் நபர் இல்லை என்​பதை குறிப்​பிட்​டு, நடந்​தவற்​றில் எதை​யும் மறைக்​காமல் தலை​மை​யிடம் விளக்​கம் அளித்​திருக்​கிறேன்.

அறைக்​குள் நிர்​வாகி​களிடையே நடந்த விவாதத்தை அறி​யாமை​யில் பரப்பிவிட்​ட​வர்​களும் திமுக எனும் என் குடும்​பத்​தைச் சார்ந்​தவர்​கள் என்றே இப்​போதும் கருதுகிறேன். அவர்​கள் இதை உணர வேண்​டும். வரும் தேர்​தலில் எனக்​காக இல்​லை​யென்​றாலும் தி​முக தலை​மைக்​காக, தி​முக-​வின் வெற்​றிக்​காக பணி​யாற்​றி​னால் அதுவே எனக்​குப் போதும்” என்​றார் அவர். தேர்​தல் நெருங்​கிட்​டு இருக்​கு எமோஷனைக்​ கொஞ்​சம்​ கட்​டுப்​படுத்​துங்​க தர்​மச்​செல்​வன்​ ​சார்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x