Published : 03 Mar 2025 05:52 AM
Last Updated : 03 Mar 2025 05:52 AM

ரமலான் நோன்பு தொடங்​கியது: மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று முதல் நாள் நோன்பு துறந்த இஸ்லாமியர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ரமலான் நோன்பு நேற்று தொடங்​கியதையொட்டி, மசூதி​களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்​தினர். இஸ்லாமியர்​களின் 5 முக்கிய கடமை​களில் ரமலான் நோன்பு கடைபிடிப்​பதும் ஒன்றாகும். ரமலான் நோன்பு தொடங்​கு​வதற்கான பிறை பிப்​.28-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை), சென்னை​யிலும் இதர மாவட்​டங்​களி​லும் காணப்​பட​வில்லை.

எனவே, மார்ச்​.2-ம் தேதி (ஞாயிற்றுக்​கிழமை) ரமலான் நோன்பு தொடங்​கு​கிறது என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்​தார். இதைத்​தொடர்ந்து, நேற்று ரமலான் நோன்பு தொடங்​கியது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்​பிட்டு நோன்பை தொடங்​கினர். ரமலான் நோன்பு தொடங்​கியதையடுத்து, நேற்று தமிழகம் முழு​வதும் உள்ள மசூதி​களில் சிறப்பு தொழுகை நடைபெற்​றது.

சென்னை​யில், திரு​வல்​லிக்​கேணி பெரிய பள்ளிவாசல், பெரியமேடு பள்ளிவாசல், மண்ணடி ஈத்கா, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணாசாலை தர்கா உட்பட பல்வேறு மசூதி​களில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று நடந்​தது.

இதனிடையே, ரமலான் நோன்பு தொடங்​கியதையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளி​யிட்ட செய்தி​யில், “சுய கட்டுப்​பாட்டுடன், உடலை வருத்தி, மனரீ​தியாக இறைவனுடன் நெருக்​கமாக உணர உதவும் ரமலான் நோன்​புக்காலம், அனைவருக்​கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்​சியை அளிப்​பதாக அமையட்டும்” என்று கூறி​யுள்​ளார். அமமுக பொதுச்​செய​லாளர் டிடிவி தினகரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x