Published : 03 Mar 2025 05:26 AM
Last Updated : 03 Mar 2025 05:26 AM
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல்-மாலத்தீவு வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 3) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 4 முதல் 8-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT