Published : 28 Feb 2025 03:56 PM
Last Updated : 28 Feb 2025 03:56 PM
சென்னை: சென்னை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் மினி பேருந்து இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மினி பேருந்து இயக்குவதற்கு புதிய அனுமதி சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்.
சென்னை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, வடகிழக்கில் புதியதாக 6 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, வடக்கில் 7 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அம்பத்தூரில் 9 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பூவிருந்தவல்லியில் 9 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், செங்குன்றத்தில் 2 வழித்தடங்களும் ஆக மொத்தம் 33 வழித்தடங்கள் புதியதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று, சென்னை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சோழிங்கநல்லூரில் புதியதாக 11 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, தெற்க்கில் 6 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை, தென்மேற்க்கில் 9 வழித்தடங்களும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கத்தில் 13 வழித்தடங்களும் ஆக மொத்தம் 39 வழித்தடங்கள் புதியதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதியதாக கண்டறியப்பட்டுள்ள சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திலுள்ள 72 வழித்தடங்கள் தொடர்பான விவரங்களும் சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக கண்டறியப்பட்டுள்ள 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர் குறிப்பிட்ட வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணபிக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT