Published : 11 Feb 2025 12:40 AM
Last Updated : 11 Feb 2025 12:40 AM

பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா அழைப்பிதழில் எம்ஜிஆர் - ஜெ. படங்கள் இல்லாதது ஏன்? - செங்கோட்டையன் ஆவேசம்

ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்​தில் செய்தி​யாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்​கோட்​டையன்

ஈரோடு: அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நடத்தியபாராட்டு விழாவில் எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்கள் இடம் பெறாதது ஏன்? என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்​பள்​ளி​யில் அத்திக்​கடவு - அவிநாசி திட்ட கூட்​டமைப்பு மற்றும் விவசா​யிகள் சார்பில் முன்​னாள் முதலமைச்​சரும், அதிமுக பொதுச் செயலா​ளருமான பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று முன்​தினம் நடந்​தது. இந்நிகழ்ச்​சி​யில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலா​ளரும் முன்​னாள் அமைச்​சருமான கே.ஏ.செங்​கோட்​டையன் பங்கேற்​காதது சர்ச்​சையானது.

இதுகுறித்து கோபி குள்ளம்​பாளையம் மற்றும் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்​தில் செய்தி​யாளர்​களிடம் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறிய​தாவது: அத்திக்​கடவு - அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டுகால கனவு. இந்த கனவுத் திட்​டத்​துக்காக கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ.3.72 கோடி நிதி ஒதுக்​கினார். 2011-ல் பொதுப்​பணித்​துறை அமைச்​சராக இருந்த கே.வி.ராமலிங்​கம், அத்திட்டம் தொடர்பான ஆய்வுப்​பணியை மேற்​கொண்​டார். அதன்​பிறகு, முன்னாள் முதல்வர் பழனிசாமி காலத்​தில் திட்டம் நிறைவேற்​றப்பட்டது.

முன்​னாள் முதல்​வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் நாங்கள் அடையாளம் காணப்​பட்​ட​வர்​கள். ஆனால், அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில், திட்டத்​துக்கு முன்னோடியாக இருந்த இருவரின் படங்கள் விழா மேடையிலும், அழைப்பிதழிலும் இடம்​பெற​வில்லை. முன்ன​தாக, அத்திக்​கடவு - அவிநாசி திட்ட விழாக்​குழு​வைச் சேர்ந்த 4 பேர் என்னை சந்தித்து, விழா​வில் பங்கேற்​க​ அழைப்புவிடுத்​தனர். அப்போது நான், ‘எங்களைவாழவைத்த தலைவர்​களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் அழைப்பிதழில் இல்லை. நீங்கள் என்னிடம் கலந்து பேசி​யிருந்​தால், என்னுடைய உணர்​வுகளை உங்களிடம் பிரதிபலித்​திருப்​பேன். 3 நாட்​களுக்கு முன்​பாகத்​தான், எங்களுக்கு அழைப்​பிதழை தருகிறீர்​கள்’ என்று தெரி​வித்​தேன்.

இதன் தொடர்ச்​சி​யாகவே அந்த விழா​வில் நான் பங்கேற்​க வில்லை. விழாவை புறக்​கணிக்​கிறேன் என்​ப​தை விட, என்னுடைய உணர்வுகளை வெளிப்​படுத்தியிருக் கிறேன். இவ்​வாறு தெரி​வித்​தார்​.

பகிரங்க மோதல்: அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பகிரங்க மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x