Published : 10 Feb 2025 04:38 PM
Last Updated : 10 Feb 2025 04:38 PM
சென்னை: தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.
ஐபாக் நிறுவனத்தின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் பிரசாந்த் கிஷோர். 2021-ம் ஆண்டுக்குப் பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடவில்லை. ஆனால், தவெக-வை தொடங்கிய பின்னர், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாகவே, அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்திக்க, பிரசாந்த் கிஷோர் நேரம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறவில்ல.
இந்நிலையில், விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அண்மையில் தவெக-வில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT