Published : 29 Jan 2025 06:20 AM
Last Updated : 29 Jan 2025 06:20 AM

சென்னையில் பிப்.4-ம் தேதி அதிமுக கள ஆய்வு

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் கட்சி அமைப்பு​ரீ​தியாக கள ஆய்வு பிப்​.4-ல் நடைபெறும் என்று அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி அறிவித்​துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​: அதிமுக கிளை, வார்டு, வட்டம் மற்றும் சார்பு அமைப்பு​களின் பணிகள் மற்றும் செயல்​பாடுகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து, விவரங்களை கட்சி தலைமைக்கு சமர்ப்​பித்​தனர்.

இந்நிலை​யில், சென்னை மாவட்​டத்​தில் கட்சி அமைப்பு​ரீ​தியாக செயல்​பட்டு வரும் மாவட்​டங்​களில் வரும் 4-ம் தேதி முன்​னாள் அமைச்​சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.செம்​மலை, கே.பி.அன்​பழகன், சி.விஜயபாஸ்​கர், ப.மோகன், முன்​னாள் எம்.எல்.ஏ. கே.சிங்​காரம் ஆகியோர் கள ஆய்வு மேற்​கொள்​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x