Published : 27 Jan 2025 03:32 PM
Last Updated : 27 Jan 2025 03:32 PM
சென்னை: சென்னையில் வரும் ஜன.29-ம் தேதி, திமுக எம்.பி.க்கள் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் ஜன.29-ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறும்.
இதில், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் மத்திய அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT