Published : 27 Jan 2025 01:40 PM
Last Updated : 27 Jan 2025 01:40 PM

100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை விவகாரம்: நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு மனு

சென்னை: 100 நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்துள்ளார்.

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,மனு அளித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்ட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினை (MGNREGS) செயற்படுத்துவதில் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. மனிதசக்தி நாட்கள் உருவாக்கம், பெண்கள் பங்கேற்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், பணிகளை முடித்தல் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம் போன்றவற்றில் தமிழ்நாடு தொடர்ச்சியாக முதன்மையான மாநிலமாக இருந்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 85 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1.09 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், மொத்த வேலைவாய்ப்புகளில் 29% ஆதி திராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 27.11.2024 முதல் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊதியத்துக்கான நிதியினை உடனடியாக விடுவிக்கக் கோரி 13.01.2025 அன்று கடிதம் வாயிலாக பிரதமர் கேட்டுக்கொண்டார்.

4-ம் தேதி வரை நிதி விடுவிக்கப்படாத நிலையில் 27.01.2025 அன்று டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரச, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 27.11.2024 முதல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவை தொகையான ரூ.1,635 கோடியினை உடனடியாக விடுவிக்கக் கோரியும், 2024-25 ஆம் ஆண்டிற்கு கூடுதல் மனித சக்தி நாட்களுக்கு ஒப்புதல் வழங்கவும், மேலும் தமிழ் நாட்டில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தொடர்ந்து ஆதரவு வழங்க கடிதக் குறிப்பு வழங்கினர். அப்போது ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ்.எஸ்.யாதவ் உடன் இருந்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x