Last Updated : 27 Jan, 2025 01:28 PM

 

Published : 27 Jan 2025 01:28 PM
Last Updated : 27 Jan 2025 01:28 PM

ஆளுநர் வருகையை எதிர்த்து போராட்டம்: சிதம்பரத்தில் இண்டியா கூட்டணி கட்சியினர் கைது

கடலூர்: சிதம்பரத்தில் நடைபெற்ற, சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்/என்.ரவி பங்கேற்க இன்று (ஜன.27) காலை சிதம்பரம் வருகை தந்தார்.

இந்நிலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகே, இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூஸா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் குமரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் மக்கின், மாநில நிர்வாகி ஜெமினி ராதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சேகர், வட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ் ஒளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், சுவாமி சகஜானந்தாவின் கொள்கைகளை களவாட நினைக்கும் ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீசஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x