Published : 27 Jan 2025 06:10 AM
Last Updated : 27 Jan 2025 06:10 AM

சென்னை | ஆட்டோ புதிய கட்டணம் நிர்ணயம்

சென்னை: ஆட்டோ புதிய கட்டணம் தொடர்பாக விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்​களின் கூட்​டமைப்பு வெளி​யிட்​டுள்​ளது. பிப்​.1-ம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்​கப்​படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்​துள்ளனர்.

அனைத்து ஆட்டோ சங்கங்​களின் கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர் டி.ஏ.ஜாஹீர் ஹுசைன் கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை வெளி​யிட்​டுள்​ளார்.

அதன்​படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடு​தலான ஒவ்வொரு கிமீ-க்​கும் ரூ.18, காத்​திருப்பு கட்டணம் நிமிடத்​துக்கு ரூ.1.50, இரவு நேரத்தில் (இரவு 11 முதல் அதிகாலை 5) பகல் நேர கட்​ட​ணத்​தில் 50 சதவீதம் அதிகம் வசூலிக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஓட்டுநர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆட்டோ
கட்டண விகிதம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x