Published : 26 Jan 2025 04:50 PM
Last Updated : 26 Jan 2025 04:50 PM
ராமேஸ்வரம்: ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடற்பரப்பில் உள்ள முயல் தீவில் இந்திய கடலோர காவல் படை சார்பாக கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதிக் கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடற்பரப்பில் உள்ள முயல்தீவில் கடலோர காவல்படை சார்பாக இன்று 76வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் இந்திய கடலோர காவல் படையின் கிழக்குப் பகுதிக் கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் கலந்துகொண்டு கொடியேற்றி, கடலோர காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கிழக்குப் பகுதிக் கமாண்டர் டோனி மைக்கேல் கூறியதாவது: ''மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கான தடுப்பதற்கான கண்காணிப்பு பணியில் இந்திய கடலோர காவல் படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இது இரு நாட்டு உறவுக்கும் பாதகமாக அமையும். இந்திய-இலங்கை சர்வதேக கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை முற்றிலும் தடுப்பதற்கு இந்திய கடலோர காவல் படையும், இலங்கை கடற்படையும் கூட்டு ரோந்து பணிகளில் ஈடுபடுவது ஆலோசனை செய்த வருகிறோம்,'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT