Published : 26 Jan 2025 06:18 AM
Last Updated : 26 Jan 2025 06:18 AM

திருவொற்றியூர் உட்பட 7 மண்டலங்கள், ஆவடி மாநகராட்சியில் 28-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: புழல் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான குழாய்களில் நீர் அளவீடு கருவிகள் பொருத்தப்படுவதால் வரும் 28-ம் தேதி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களிலும் ஆவடி மாநகராட்சிப் பகுதிகளிலும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புழலில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதானக் குழாய்களில் நீர் அளவீடு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதனால், 28-ம் தேதி காலை 10 முதல் இரவு 8 மணி வரை திருவொற்றியூர் மண்டலத்தில் தாழங்குப்பம், நெய்தல் நகர், ராமசாமி நகர், கத்திவாக்கம், மணலி மண்டலத்தில் மணலி நியூ டவுன், கொசப்பூர், எம்.எம்.டி.ஏ. மாத்தூர், சின்னசேக்காடு, மாதவரம் மண்டலத்தில் புக்குராஜ் நகர், தணிகாசலம் நகர், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், தண்டையார்பேட்டை மண்டலத்தில் வியாசர்பாடி, படேல்நகர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளிலும்,

திரு.வி.க.நகர் மண்டலத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், பெரம்பூர், புளியந்தோப்பு, அம்பத்தூர் மண்டலத்தில் கள்ளிக்குப்பம், கொரட்டூர், ஒரகடம், அம்பத்தூர், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ரோடு, முகப்பேர், அண்ணாநகர் மண்டலத்தில் சிட்கோ நகர், அண்ணாநகர், ராஜமங்கலம் ஆகிய பகுதிகளிலும் ஆவடி மாநகராட்சியில் நாகம்மை நகர், ஆவடியிலும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் எந்தவித தடையுமின்றி வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x