Published : 10 Jan 2025 09:15 PM
Last Updated : 10 Jan 2025 09:15 PM
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்கள் விடுமுறை தினங்களாகிறது. வரும் 16, 17-ம் தேதிகள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வரும் பொங்கல் விடுமுறை தினங்கள் வரும் 14 மற்றும் 15 தேதிகள் மட்டும் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சார்பு செயலர் ஹிரண் இன்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி வரும் 16 மற்றும் 17-ம் தேதிகள் உழவர் திருநாளுடன் பொங்கலை கொண்டாட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறைக்கு மாற்றாக வரும் பிப்ரவரி 1 மற்றும் 8-ம் தேதிகள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT