Published : 10 Jan 2025 12:29 AM
Last Updated : 10 Jan 2025 12:29 AM

​திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்சேரி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

மேட்​டூர்​ / சென்னை: திருப்​ப​தி​யில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்​சேரி பெண்​ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்​கப்​படும் என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின் அறிவித்​துள்ளார். மேலும், மல்லிகா குடும்பத்தினருக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்​டூர் அருகே மேச்​சேரியை அடுத்த தாசனூர் காட்டு​வளவு பகுதி​யைச் சேர்ந்​தவர் மல்லிகா (55). இவரது கணவர் கிருஷ்ணன் (58), மேச்​சேரி பேரூராட்​சி​யில் தற்காலிக டேங்க் ஆபரேட்​ட​ராகப் பணிபுரி​கிறார்.

இந்நிலை​யில், மல்லிகா, கிருஷ்ணன் உள்பட 14 பேர் திருப்​ப​திக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்​றிருந்​தனர். சொர்க்​கவாசல் திறப்​புக்கு இலவச டோக்கனை வாங்க முற்​பட்​ட​போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மல்லிகா உயிரிழந்​தார். அவரது உடல் திருப்​ப​தி​யில் உள்ள அரசு மருத்​துவ​மனை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்​பில், “உயி​ரிழந்த மல்லி​கா​வின் உடலை சொந்த ஊருக்​குக் கொண்டுவர அனைத்து ஏற்பாடு​களை​யும் அரசு சார்​பில் மேற்​கொள்ள உத்தர​விடப்​பட்​டுள்​ளது. மல்லிகா குடும்பத்​துக்கு முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தர​விடப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்ளார்.

தலைவர்கள் இரங்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளி​யிட்ட அறிக்கை​யில், “திருப்​ப​தி​யில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்​சேரி பெண் உள்ளிட்ட அனைத்து பக்தர்​களின் குடும்பத்​தா​ருக்​கும் ஆழ்ந்த இரங்​கல்” என்று தெரி​வித்​துள்ளார்.

இதேபோல, முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்​வம், தமிழக காங்​கிரஸ் தலைவர் கு.செல்​வப்​பெருந்​தகை, அமமுக பொதுச் செயலா​ளர் டிடிவி ​தினகரன், ​வி.கே.சசிகலா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரி​வித்​துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x