Published : 08 Jan 2025 12:48 AM
Last Updated : 08 Jan 2025 12:48 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 11-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
2026-ல் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான வலுவான கூட்டணி அமைப்பது, இரட்டை இலை பிரச்சினையை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள பழனிசாமி, கட்சியினர் அனைவரையும் தீவிரமாகப் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியை பலப்படுத்துவது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராவது, இரட்டை இலை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. தற்போது அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT