Published : 30 Dec 2024 12:14 AM
Last Updated : 30 Dec 2024 12:14 AM

பொங்கல் பரிசுத் தொகை வழங்​கு​வ​தில் நிதிச்சுமையால் சிக்கல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

நாகர்​கோ​வில்: நிதிச்​சுமை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்​கு​வ​தில் சிக்கல் ஏற்பட்​டுள்ளதாக தமிழக நிதி​அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கன்னி​யாகுமரி​யில் செய்தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகள் வழங்​கப்​படும். நடப்​பாண்​டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்​கு​வ​தில், நிதிச்​சுமை காரணமாக கடினமான சூழ்​நிலை ஏற்பட்​டுள்​ளது. எனினும், பொங்கல் தொகுப்பு பொருட்​களுக்கான நிதியை முதல்வர் வழங்​கி​யுள்​ளார். வரும் காலங்​களில் நிதி நிலை​மையை சீராக்​கும் நடவடிக்கை மூலம் நல்ல சூழ்​நிலை உருவாகும் என நம்பு​கிறேன்.

மகளிர் உரிமைத்​தொகை பெற்று​வரும் மகளிருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக் கணக்​கில் ரூ.1,000 வழங்​கப்​படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த முறை முன்​கூட்​டியே மகளிர் உரிமைத்​ தொகை வழங்​கப்​படும். இவ்​வாறு அமைச்​சர் தங்​கம் தென்னரசு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x