Published : 24 Dec 2024 10:08 AM
Last Updated : 24 Dec 2024 10:08 AM
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (டிசம்பர் 24) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) ராமேஸ்வரத்திலிருந்து 383 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது 2 படகுகளில் இருந்த 17 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. படகுகளையும் பறிமுதல் செய்தது.
கைதானோர் விவரம்: தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இருதயம் (59), ஆரோக்கியதாஸ் (44), அந்தோணியார் அடிமை (64), ரோங்கான்ஸியான் (53), முனியாண்டி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (60), ராமன் (52), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (40) உள்ளிட்ட 8 பேரும், மற்றொரு படகிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ், அமல்ராஜ், கிருபாகரன் (56), அருள் தினகரன் (24), மாதவன் (22), அந்தோணி ஐசக் (19) மற்றும் டேவிட் (50), தங்கச்சிமடத்தைச் சேர்ந்த யாக்கோப் (35), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (27) உள்ளிட்ட 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT