Published : 24 Dec 2024 12:08 AM
Last Updated : 24 Dec 2024 12:08 AM
சேலம்: சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த வெள்ளிவிழா கொண்டாட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். 100 உழவர் சந்தைகளுக்கு ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
திருவண்ணாமலையில் பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, தமிழக அரசு விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என கூறியுள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதால் பாமக மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்குகிறோம். ஆனால், காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு பேசுகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT