Last Updated : 23 Dec, 2024 03:52 PM

1  

Published : 23 Dec 2024 03:52 PM
Last Updated : 23 Dec 2024 03:52 PM

மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் - ஆய்வு முறையில் சீரமைக்கும் தொல்லியல் துறை

மாமல்லபுரம் பாண்டவர் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

செங்​கல்​பட்டு மாவட்டம் மாமல்​லபுரத்​தில் பல்லவ மன்னர்​களின் சிற்​பக்​கலையை பறைசாற்றும் வகையில் அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்​ட​வர்கள் மண்டபம் எனப்​படும் முழுமை பெறாத வடக்கு கிருஷ்ண மண்டபம் உட்பட பல்வேறு சிற்​பங்கள் அமைந்​துள்ளன. பாரம்​பரியமான இச்சிற்பங்களை யுனெஸ்கோ அங்கீகரித்​துள்ளது. இவற்றை இந்திய தொல்​லியல்​துறை​யினர் பாதுகாத்து பராமரித்து வருகின்​றனர்.

இவற்றில், கடற்கரை பகுதி​யில் உள்ள குடவரை கோயில், ஐந்துரதம் சிற்​பங்கள் ஆகியவை, உப்பு காற்றில் சேதமடை​யாமல் இருக்க, அவ்வப்போது ரசாயன பூச்​சுகள் பூசப்​பட்டு பாது​காக்​கப்​பட்டு வருகிறது. ஒரே பாறை​யில் வடிவ​மைக்​கப்​பட்ட பாண்​டவர் மண்டபத்​தில் உள்ள குடவரை சிற்​பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரக் கூடியவை. அச்சிற்பம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள விதம் மற்றும் சிற்​பத்​தின் நுட்​பமான வேலைப்​பாடு​கள், காண்​போரை வியக்​கவைக்க கூடியவை.

இந்நிலை​யில், மேற்​கண்ட மண்டபத்​தின் மேல்​பகு​தி​யில் விரிசல் ஏற்பட்​டுள்​ளது. விரிசல் பகுதியில் மழைநீர் கசிகிறது. இதனால், சிற்ப மண்டபத்​தின் முகப்​பில் அமைந்​துள்ள அழகிய வேலைப்பாடு​களுடன் கூடிய தூண்கள் சிதிலமடை​யும் அபாயம் ஏற்பட்​டுள்​ளது. இதையடுத்து, முன்னெச்​சரிக்கையாக தொல்​லியல்​துறை சார்​பில் விரிசல் பகுதி​யில் உள்ள தண்ணீர் கசிவை தடுப்​ப​தற்​காக​வும் விரிசலை சீரமைக்​க​வும் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. முதல்​கட்​டமாக தொல்​லியல்​துறை அதிகாரிகள் விரிசலை ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்​கொண்​டனர். தற்போது, கடந்த சில நாட்​களாக மழை பெய்து வருவ​தால் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்​டுள்​ளது.

இந்நிலை​யில், பாண்​டவர் மண்டபம் அமைந்​துள்ள பாறை​யின் மேல் பகுதி​யில் மழைநீர் வழிவதை தடுக்​கும் வகையில், மாற்று இடத்​தில் மழைநீரை வெளி​யேற்ற திட்​ட​மிட்டு பணிகளை மேற்​கொள்ள உள்ள​தாக​வும் இப்பணிகள் அனைத்​தும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி முறை​யில் மேற்​கொள்​ளப்பட உள்ள​தாக​வும் தொல்​லியல்​துறை வட்டாரங்கள் தெரி​வித்தன. இதுகுறித்து, மாமல்​லபுரம் தொல்​லியல்​துறை அதிகாரிகள் கூறிய​தாவது: முழுமை பெறாத வடக்கு கிருஷ்ண மண்டபத்தை உள்ளூர் மக்கள் பஞ்ச பாண்​ட​வர்கள் மண்டபம் எனக் கூறுகின்​றனர்.

மிகவும் அழகிய சிற்ப வேலைப்பாடு​களுடன் கூடிய தூண்​களில் உள்ள சிங்க வடிவிலான சிற்பங்கள் மண்டபத்​துக்கு மிகவும் அழகு சேர்க்​கும் விதமாக அமைந்​துள்ளது. இந்நிலை​யில், தற்போது தூண்கள் அமைந்​துள்ள பகுதி​யில் பாறை​யில் ஏற்பட்​டுள்ள விரிசல் வழியாக மழைநீர் கசிவு ஏற்பட்​டுள்​ளது.

அதனால், துறை சார்ந்த வல்லுநர்​களின் ஆலோசனை​யுடன் விரிசல் பகுதி​யில் தண்ணீர் கசிவை தடுக்​க​வும் விரிசலை சீரமைக்​க​வும், பணிகள் ஆய்வு முறை​யில் மேற்​கொள்​ளப்​பட்டன. இதனால், மண்டபத்​துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. எனினும், மண்டபம் அமைந்​துள்ள பாறை​யின் மீது மழைக்​காலங்​களில் வரும் மழைநீரை, மண்டப பகுதி​யில் வெளி​யேறுவதை தடுத்து மாற்று இடத்​தில் மழைநீர் வெளி​யேற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதற்கான பணிகள் விரை​வில் தொடங்​கப்​படும். மேற்​கண்ட மண்டபத்​தில் மேற்​கொள்​ளப்​படும் அனைத்து பணிகளும் ஆய்வு முறை​யிலேயே மேற்​கொள்​ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூறிய​தாவது: விரிசல் அதிகரித்​தால், குறிப்​பிட்ட மண்டபத்​தின் முகப்பு பகுதி​யில் உள்ள 5 தூண்​களும் பாறையி​லிருந்து பிரிந்து விழும் அபாயம் உள்ளது. எனினும், தேவையான முன்னேற்​பாடுகளை தொல்​லியல்​துறை மேற்​கொண்டு வரு​வது, இச்​சிற்ப பகு​தி​யில் பார்க்​கும்​போது தெரி​கிறது. இந்த மண்​டபத்​தில் எந்​தவித சேத​மும் ஏற்​படாத வகை​யில், நவீன தொழில்​நுட்​பங்களை பயன்​படுத்தி சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்​ள வேண்​டும்​ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x