Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம் படிப்புக்கு கவுன்சலிங் தொடங்கியது: முதல் நாளில் 9 பேருக்கு அனுமதி கடிதம்

பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 8 படிப்புகளுக்கான கவுன்சலிங் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 9 பேர் கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர். பொதுப் பிரிவு கவுன்சலிங் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

7 ஆயிரம் இடங்கள்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த பட்டப்படிப் புகளான பி.எஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி. (பேச்சுப் பயிற்சி படிப்பு), பிபிடி (பிஸியோதெரபி), பிஓடி (ஆக்குபேஷனல் தெரபி), பி.எஸ்சி ரேடியாலஜி - இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்ஸி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி.கார்டியோ பல்மோனரி பர்ஃப்யூஷன் டெக்னாலஜி (இதய- நுரையீரல் கருவி தொழில் நுட்பப் படிப்பு) ஆகிய எட்டு படிப்புகளுக்கு சுமார் 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 17,310 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சலிங் கீழ்பாக் கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் மாற்றுத் திறனா ளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோ ருக்கான கவுன்சலிங் நடைபெற்றது.

கவுன்சலிங் முடிவில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 8 பேருக்கு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் ஒருவருக்கும் கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. பொதுப் பிரிவு கவுன்சலிங்.

27-ஆம் தேதி வரை

19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் 1,000 பேர் வீதம் 8 ஆயிரம் பேர் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x