Published : 04 Apr 2014 12:37 PM
Last Updated : 04 Apr 2014 12:37 PM

வீட்டுமனை கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே வீட்டுமனைத் தராததைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த ஞாயிறு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் தலித் இனத்தவர்களில் சிலருக்கு சொந்தமாக வீடு இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள அரசின் புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை தரக் கோரி, கடந்த 8 மாதங்களாகப் போராடி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை வீட்டு மனை வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து ஞாயிறு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் வியாழக்கிழமை கறுப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையனில், வரும் நாடாளு மன்றத் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x