Published : 09 Nov 2023 10:06 AM
Last Updated : 09 Nov 2023 10:06 AM

3-வது நாளாக மழை - ஈரோட்டில் நெற்பயிர்கள் சேதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி அருகே உள்ள அரசூர் - தட்டாம்புதூரில் தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.

இதனால், ரூ.20 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்த விவசாயிகள், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோபி அருகே தாழைக் கொம்புபுதூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளநீர் சூழ்ந்தது. வருவாய்த் துறையினர் அப்பகுதியை பார்வை யிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

ஈரோட்டில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): கொடிவேரி - 71, அம்மாப் பேட்டை - 60.40, வரட்டுப் பள்ளம் - 58.40, கோபி - 52.20, பவானி சாகர் - 42, பெருந்துறை - 36, பவானி - 19.20, சத்திய மங்கலம் - 18, கவுந்தப்பாடி - 15, ஈரோடு - 9, மொடக் குறிச்சி - 6.20, நம்பியூர் - 6, சென்னிமலை - 4.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x