Published : 19 Oct 2023 06:10 AM
Last Updated : 19 Oct 2023 06:10 AM

சென்னை - தாம்பரம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூர்- விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவ.1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு அக்.29-ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவ.1,2, 3 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு அக்.29-ம் தேதி இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x