Published : 12 Jul 2014 10:00 AM
Last Updated : 12 Jul 2014 10:00 AM

உதவி பொறியாளர் தேர்வு நேர்காணலுக்கு மனிதநேய அறக்கட்டளையில் கட்டணமில்லா பயிற்சி

டிஎன்பிஎஸ்சி உதவி பொறியாளர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனிதநேய அறக்கட்டளை சார்பில் கட்டணமில்லா நேர்காணல் பயிற்சி ஜூலை 14-ல் தொடங்குகிறது.

மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகம் மூலம் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2013-ம் ஆண்டு உதவி பொறியாளர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டு, 7.7.2014 அன்று முடிவு வெளியாகியுள்ளது.

அதில் தேர்வாகியுள்ள மாணவ, மாணவியர் மனிதநேய மையம் சார்பில் இம்மாதம் 14-ம் தேதி முதல் நடத்தப்படும் கட்டணமில்லா நேர்காணல் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் புகைப்படம், நேர்முகத் தேர்வு அழைப்பாணை நகல் ஆகியவற்றுடன் உடனடியாக நேரில் வந்து (முகவரி: 28, முதல்பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35) பதிவு செய்துகொள்ளலாம். தொடர்புக்கு

044-24358373, 9840106162 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x