Published : 16 Jul 2014 09:37 AM
Last Updated : 16 Jul 2014 09:37 AM

சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் சிலை திறக்கப்படும்: ஞானதேசிகன் தகவல்

சத்தியமூர்த்தி பவன் வளாகத் தில் காமராஜரின் 9 அடி உயர வெண்கல சிலை ஆகஸ்ட் 2-வது வாரத்தில் திறக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் சார் பில் காமராஜரின் 112-வது பிறந்தநாள் விழா செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டது. கட்சித் தலைமை அலுவலக மான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலை மையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். பின்னர் நிருபர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை கட்டியதும் தேனாம் பேட்டையில் காங்கிரஸ் மைதானத்தை வாங்கித் தந்த தும் அவர்தான். அவரது நினைவைப் போற்றும் வகை யில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் 9 அடி உயரத் தில் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. அதேபோல காமராஜரின் குருவான சத்தியமூர்த்தியின் மார்பளவு சிலையும் அமைக் கப்படுகிறது. இந்த சிலைகள் அடுத்த மாதம் 2 வது வாரத்தில் திறக்கப்படும்.

எந்தப் பிரச்சினையையும் பாஜக அரசால் தீர்க்க முடி யாது. விலைவாசி இன்னும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதன் தாக்கம் வரும் தேர்தல் களில் எதிரொலிக்கும். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளில் ஆகஸ்ட் முதல் கவனம் செலுத்த உள்ளோம்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச் சர் ஜி.கே.வாசன் கூறும்போது, “வேட்டி கட்டுவது நமது பண்பாடு. வேட்டி அணிந்து செல்வதை கவுரவமாக கருத வேண்டும். காமராஜரே ரஷ் யாவுக்கு சென்றபோது, வேட்டி அணிந்துதான் சென்றார். இந்த பிரச்சினையில் மக்களின் எண் ணங்களை புரிந்து அதற்கு ஏற்ப தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்’’ என்றார்.

முன்னதாக காமராஜர் நினைவு இல்லம், பல்லவன் சாலை மற்றும் காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x