Published : 10 Jul 2014 09:38 AM
Last Updated : 10 Jul 2014 09:38 AM

எந்தெந்த ரயில் நிலையங்களுக்கு ‘வை-பை’ வசதி கிடைக்கும்?

தமிழகத்தில் எந்தெந்த ரயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் செவ்வாய் கிழமை தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக் காக பல்வேறு வசதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அவற்றில் ‘ஏ-1’ மற்றும் ‘ஏ’ வகை ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள ‘வை-பை’ வசதி குறிப்பிடத்தக்கதாகும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள ‘ஏ-1’ வகை ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, கோவை ஆகிய வற்றில் ‘வை-பை’ வசதி விரைவில் வரவுள்ளது.

‘ஏ’ வகை ரயில் நிலையங் களான விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருப் பூர், மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக் கல் ஆகியவற்றிலும் ‘வை-பை’ வசதி அறிமுகம் செய்யப் படவுள்ளது. கேரளாவில் ஏ-1 வகை ரயில் நிலையமான திருவனந்த புரத்துக்கும் ‘வை-பை’ வசதி கிடைக்கவுள்ளது.

ரயில் நிலையங்களில் இந்த வசதியைப் பயன்படுத்த இணைய தள வசதி உள்ள ‘ஸ்மார்ட் போன்’ வசதி இருந்தாலே போதும். பணம் செலுத்தி இணையதள இணைப்பு பெறாமலேயே ‘வை-பை’ மூலம் இணையதளத்தைப் பயன்படுத்த முடியும். இப்புதிய வசதியால், ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ஏராளமான பயன்கள் பயணிகளுக்கு கிடைக்கும்.

சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ஷாப்பிங் மால், பெரிய நிறுவனங்களில்தான் ‘வை-பை’ வசதி இருக்கும். தமிழகத்தில் முதன்முறையாக பொது இடத்தில் ‘வை-பை’ வசதி வருவது இதுவே முதல்முறையாகும். இந்த வசதியால் சென்னையில் மட்டும் லட்சக்கணக்கான ரயில் பயணிகள் பயன்பெறுவர்.

சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மூர்மார்க்கெட் புறநகர் ரயில் நிலையத்துக்கு தினமும் 5 லட்சம் பயணிகளும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் 1.45 லட்சம் பயணி களும் வந்து போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x