Published : 04 Aug 2023 05:04 AM
Last Updated : 04 Aug 2023 05:04 AM
கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.5-ம் தேதி (நாளை) காணொலியில் நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாகடந்த ஜூன் மாதம் தொடங்கி, அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இந்த ஓராண்டில் அரசு மற்றும் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுக சார்பில், நூற்றாண்டை முன்னிட்டு, புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்டபணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, திமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த பணிகளும் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆக.7-ம் தேதிகருணாநிதியின் 5-ம் ஆண்டுநினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
உறுப்பினர்கள் சேர்க்கை: புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ப்பதில் பல மாவட்டங்களில் நிர்வாகிகள் சுணக்கமாகச்செயல்படுவது கண்டறியப்பட் டுள்ளது. அதேபோல் பூத் கமிட்டி அமைப்பதிலும் குழப்பங்கள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டு, தேவையான அறிவுறுத்தல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதுதவிர, பூத் கமிட்டி அமைப்பதில் நடைபெறும் குழப்பங்களை தீர்ப்பதற்கான முயற்சிகளும் இதில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், கருணாநிதி நினைவு தினத்தில் அமைதிப் பேரணி நடத்துவது, கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது குறித்தும், பேரணி, மாநாடு நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT