Published : 25 Jul 2014 09:10 AM
Last Updated : 25 Jul 2014 09:10 AM
‘‘செங்கல்பட்டு அருகே ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்’’ என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார்.சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேரவை விதி 110ன் கீழ், வியாழக்கிழமை படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கிறேன். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறை யில் இந்தியாவின் மையமாக தமிழ்நாட்டை உருவாக்க, மருத்துவ தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க, மருத்துவ தொழில்நுட்ப தயாரிப்பு களின் இறக்குமதியை குறைத்து அதன்மூலம் மருத்துவ செலவைக் குறைக்க எச்.எல்.எல். லைப் கேர் லிமிடெட் என்ற இந்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா ஒன்று டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும்.
இப்பூங்கா, இந்தியாவிலேயே முதன்மையான மருத்துவப் பூங்காவாக அமைவதோடு, மருத் துவக் கருவிகள் மற்றும் உப கரணங்கள் மண்டலம், உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவல் மண்டலம், அடை காப்பு வசதி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மண்டலம் போன்ற உட்கட்ட மைப்பு வசதிகளுடன் அமையும். இப்பூங்காவில் அமைக்கப்பட வுள்ள 100 தொழில் பிரிவுகளில், 30 தொழில் பிரிவுகள் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்காக அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும்.
கோயம்புத்தூரில் அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சொந்தமான 10 ஏக்கரில், ரூ.55 கோடியில் ‘டைசல் பயோபார்க் 3’ஐ டிட்கோ நிறுவனம் டைடல் பார்க் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கும்.
ராமநாதபுரம், திருவாடானை வட்டங்களில், தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் ரூ.6,525 கோடியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் அமைக்கப்படும்.
கடலாடி வட்டத்தில் உள்ள வாலிநோக்கம் உப்பள வளாகத்தில், 500 ஏக்கரில் 50 மெகாவாட் மின் திறன் கொண்ட சூரிய வெப்ப சலன மின் உற்பத்தியுடன் கூடிய 15 எம்எல்டி கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டம் ரூ.1,500 கோடியில் டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 527 ஏக்கரில் ரூ.920 கோடியில் மின்னணுவியல் உற்பத்தி வளாகம்.
நடப்பாண்டில் ரூ.190.57 கோடியில் சிப்காட் நிறுவனத்தின் வெவ்வேறு தொழில் வளாகங்கள், பூங்காக்களில் உட்கட்டமைப்பு வசதிகள். 12 மாவட்டங்களில் 20 சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள சாலையோரங்களில் இருபுறமும் ரூ.5 கோடியில் மரங்கள் நடப் படும்.
சிப்காட் நிறுவனத்தின் 3 தொழில் வளாகங்கள் மற்றும் பூங்காக் களில் ரூ.6 கோடியில் நிலத்தடி நீர் மேம்பாடு.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் காகித ஆலையில் இருந்து உருவாகும் சுண்ணாம்புக் கழிவு, மின் உற்பத்தி நிலையத்தின் உலர் சாம்பல் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிமென்ட் தயாரிக்கும் ஆலை ரூ.30 கோடியில் விரி வாக்கம். கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.40 கோடியில் காகிதம், அடுக்கு காகித அட்டையில் இருந்து விலை மதிப்பு கூட்டிய பொருட் கள் உற்பத்தி செய்யும் மையம்.
மூன்று சர்க்கரை ஆலைகளில் தலா ரூ.90 கோடியுடன் தினமும் 45 கிலோ லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட வடிப்பகத்துடன் கூடிய எத்தனால் ஆலைகள்.
அமராவதி, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், ரூ.17 கோடி யில் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இவை உள்ளிட்ட தொழில் மேம்பாட்டுத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT