Published : 08 Jun 2023 06:31 AM
Last Updated : 08 Jun 2023 06:31 AM
சென்னை: மூளைச்சாவு அடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
வேலூர் மாவட்டம் மதுமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (47). மஞ்சம்பாக்கத்தில் உள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு வென்மதி, மதுமதி ஆகிய பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 4-ம் தேதி மாலை லாரி மேல் ஏறி பிரபாகரன் மாங்காய் பறிக்கும் போது கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.33 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார்.
பிரபாகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகம், 2 கண்கள் மற்றும் தோல் ஆகியவை எடுக்கப்பட்டு தேவையான 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT