Published : 06 Jun 2023 06:28 AM
Last Updated : 06 Jun 2023 06:28 AM
சென்னை: ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 131 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் நேற்று முன்தினம் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து, ஒடிசாவின் பத்ரக் பகுதியிலிருந்து 2-வது சிறப்புரயில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு நேற்று நண்பகலில் வந்தது.இந்த ரயிலில், விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், கோரமண்டல் விரைவு ரயிலைத் தவறவிட்ட பயணிகள் என மொத்தம் 17 பேர்வந்தனர்.
முன்னதாக, பயணிகளுக்கு உதவும் வகையில், தமிழக போலீஸாரும், ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனையின் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையிலிருந்தனர். பயணிகளின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை வரவேற்று உரிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT