Published : 04 Jun 2023 09:26 AM
Last Updated : 04 Jun 2023 09:26 AM

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர்கள், தலைவர்கள் இரங்கல்

கோப்புப்படம்

சென்னை: ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தால் மிகுந்த வேதனை அடைந்தேன். அன்புக்குரிய உறவுகளை இழந்த குடும்பங்களுக்காக என்இதயம் வருந்துகிறது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனதுஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரணநலம் பெற்று வீடு திரும்ப அனைத்துமுன்னெடுப்பையும் தமிழக அரசுதுரிதமாக எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனதுஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: 1956-ம் ஆண்டு அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்டபோது அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகியதைபோல, இன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு, இந்த பேரிழப்பைத் தாங்கும் சக்தியை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச்சேர்ந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50லட்சமும், காயமடைந்தவர்களுக்கு முறையே ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: வரலாறு காணாத படுமோசமான விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கொடிய ரயில் விபத்தில் உயிர்களை இழந்தோரின் குடும்பத்துக்கு என் கண்ணீர் அஞ்சலி.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: கோர ரயில் விபத்து நெஞ்சை உறைய வைக்கிறது. இது இந்திய வரலாற்றில் விவரிக்க இயலாத பெருந்துயரமாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சு.திருநாவுக்கரசர் எம்.பி., ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் எம்பி., அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x