Last Updated : 30 Jun, 2025 05:07 PM

 

Published : 30 Jun 2025 05:07 PM
Last Updated : 30 Jun 2025 05:07 PM

ஓவியக் கண்காட்சி: பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள்

டிஜிட்டல் ஓவியங்கள், செயற்கைத் தொழில்நுட்பம் மூலம் ஓவியங்கள் உருவாகிவரும் இந்தக் காலக்கட்டத்தில் பாரம்பரிய முறையில் கையால் ஓவியங்களை வரைந்து, ’தூரிகா’ எனும் ஓவியக் கண்காட்சியைச் சென்னையைச் சேர்ந்த 4 பெண் ஓவியர்கள் ஒன்றிணைந்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

பாரம்பரிய ஓவியங்கள்: ஓவியர்கள் சரண்யா ராஜேஷ், காயத்ரி பாலாஜி, சத்யா என். பிரபு, யமுனா பாலா ஆகியோர் கடந்த ஆறு மாதங்களாக வெவ்வேறு ஓவிய முறைகளைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களைக் கண்காட்சியில் வைத்துள்ளனர்.

ஓவியர்கள் காயத்ரி பாலாஜி, சரண்யா ராஜேஷ், சத்யா என். பிரபு, யமுனா பாலா

ஒவ்வோர் ஓவியரும் தன்னுடைய பாணியில் ஓவியங்களை வரைந்து இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், கட்டிடக்கலை, பண்டிகைகள், கொண்டாட்டம் ஆகியவற்றோடு பெண்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஓவியங்களை வரைந்துள்ளனர். கேன்வாஸ், ஆயில், அக்ரிலிக், இங்க் போன்று வெவ்வேறு ஓவிய முறைகளைக் கையாண்டுள்ளனர்.

ஓவியர்: சத்யா என். பிரபு

தென்னிந்தியாவின் பழமையான கலைக்கூடங்களில் ஒன்றான, சென்னையில் உள்ள சரளா கலைக்கூடத்தில் (ஆர்ட்வோர்ல்ட்) ஜூலை 6ஆம் தேதி வரை இந்த ஓவியக் கண்காட்சி நடைபெற உள்ளது.

ஓவியர்: யமுனா பாலாஜி

டிஜிட்டல் ஓவியர்களுக்கு மத்தியில் தொடர்ந்து பாரம்பரிய முறையில் ஓவியங்கள் வரைவது பற்றி ஓவியர் சரண்யா விளக்கினார். “ஏ.ஐ ஓவியங்கள் சந்தையில் இருந்தாலும் கையால் வரையும் ஓவியங்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம். கையால் வரையும் ஓவியங்களில் உணர்ச்சிகளை அப்படியே கடத்த முடியும். அதுமட்டுமன்றி, ஒரு ஓவியர் தனது திறனை மெருகேற்ற கையால் வரைந்து பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

ஓவியர்: சரண்யா ராஜேஷ்

பெண் ஓவியர்கள்: ஓவியக் கண்காட்சியில் பங்கெடுத்துள்ள நான்கு பெண் ஓவியர்களுமே குடும்பப் பொறுப்பில் உள்ள அம்மாக்கள். ஆனால், குடும்பப் பொறுப்பும் பேரார்வமும் வேறு என்கிற கருத்தை அழுத்தமாக முன்வைத்தனர். “திருமணத்துக்குப் பிறகு வீடு, குடும்பம், குழந்தைகள் என்றாகிவிட்டதும் தன்னுடைய திறமைக்கெனத் தனியே நேரம் ஒதுக்க முடிவதில்லை எனப் பெண்கள் பலர் சொல்கிறார்கள். இந்தச் சவால்கள் இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி எங்களால் சாதிக்க முடியும்போது உங்களாலும் முடியும் என்பதே உண்மை.

ஓவியர் காயத்ரி பாலாஜி

பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த களத்துக்கு வர வேண்டும். இக்கண்காட்சியில் உள்ள ஓவியர்களின் ‘ஸ்டைல்’ ஒன்றோடு மற்றொன்று வேறுபடுபவை. எனவே ஓவியத் துறையில் தொடர்ந்து பயணிக்க விரும்புவோருக்கு இது ஒரு புது அனுபவத்தைத் தரும்” என்றார் சரண்யா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x