Last Updated : 23 Jan, 2025 04:11 PM

 

Published : 23 Jan 2025 04:11 PM
Last Updated : 23 Jan 2025 04:11 PM

பாரதியாரின் சரண வரிகளும் பல்லவிதான்!

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி `அறிவு நீ தருமம் நீ' என்னும் பாடலைப் பாடி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார் தீபிகா தியாகராஜன். இவர், திரையிசையில் புதிய திருப்புமுனையை உண்டாக்கிய `வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்' என்னும் பாடலைப் பாடிய திருச்சி லோகநாதனின் பேத்தி. திருச்சி லோகநாதனின் வாரிசுகளில் ஒருவரான டி.எல்.தியாகராஜனின் மகள். இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கும் டி.எல். தியாகராஜனிடம் இந்தப் பாடலின் சிறப்பு குறித்துக் கேட்டோம்:

"மகாகவி பாரதியார் எழுதியிருக்கும் `ஜாதீய கீதம் -2 புதிய மொழிபெயர்ப்பு' பாடலின் சரணத்தை, பல்லவி வரிகளாக முதன்மையாக்கி இந்தப் பாடலை உருவாக்கியிருக்கின்றோம். பாரதியாரின் பாடல்களில் அமைத்திருக்கும் பல்லவியின் வரிகளைப் பலரும் மிகவும் சிலாகித்துப் பேசுவார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பாரதியின் பாடல்களின் பல்லவியில் மட்டுமல்ல; சரணத்திலும்கூட அர்த்த அடர்த்தி மிகுதியாக இருக்கும்!

தீபிகா தியாகராஜன்
தீபிகா தியாகராஜன்

`கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் `வெள்ளிப் பனிமலையில் மீதுலாவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்' என்னும் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலை என்னுடைய தந்தையார் திருச்சி லோகநாதனும் சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து ஜி.ராமநாதன் இசையில் பாடியிருப்பார்கள். இந்தப் பாடலின் பல்லவியை `பாரத தேசம் என்று பேர் சொல்லுவார்' என்னும் பாடலின் சரணத்தில் இடம்பெற்றிருக்கும் வரிகளைக் கொண்டுதான் அமைத்தனர்.

`பாரத தேசம் என்று பேர் சொல்லுவார்' பாடலின் இன்னொரு சரணத்தின் வரிகள்தான் - `சிந்துநதியின்மிசை நிலவினிலே சேரனன்நாட்டிளம் பெண்களுடனே'. இந்த வரிகளே பாடல் தொடங்கும் பல்லவி வரிகளாக விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் மலர்ந்திருக்கும்.

அறிவு நீ தருமம் நீ பாடலின் காணொளியைக் காண: https://youtu.be/q_rfOxYxBw4?si=5RDk0FHkj8a-zG1S

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x