Published : 27 Mar 2023 06:25 AM
Last Updated : 27 Mar 2023 06:25 AM
பிரதமரின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஐ.நா. இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தச் சூழலில் சிறு தானியங்களின் சர்வதேச மையமாக இந்தியாவை மாற்றும் பணியில் மாநில அரசுகளோடு இணைந்து மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் சர்வதேச சிறுதானிய மாநாடு டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேளாண் அமைச்சர்கள், அதிகாரிகள், சுகாதார மற்றும்ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT