Published : 16 Nov 2015 03:22 PM
Last Updated : 16 Nov 2015 03:22 PM

வெற்றி மொழி: வில்லியம் பிளேக்

1757 முதல் 1827 வரை வாழ்ந்த வில்லியம் பிளேக் ஒரு ஆங்கில கவிஞர் மற்றும் ஓவியர். கவிதைகள் மற்றும் ஓவியங்கள் இரண்டிலும் பெரும் புகழ்பெற்ற படைப்புகளைக் கொடுத்துள்ளார். தன்னுடைய வாழ்நாளில் சமகாலத்து அறிஞர்களால் அதிகம் அறியப்படாமல் இருந்த வில்லியம் பிளேக், அதன்பிறகு அவருடைய படைப்பிற்காக புகழ்பெற்ற அறிவுமேதை என அதிகளவில் புகழப்பெற்றார்.

இவருடைய எழுத்துகள் மற்றும் தனிப்பட்ட சிந்தனைகள் ஆகியன, எண்ணிலடங்கா எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றன.

விதைக்கும் காலத்தில் கற்றுக்கொள்; அறுவடை நேரத்தில் கற்றுக்கொடு; குளிர்காலத்தில் அனுபவி.

எது போதுமானதை விட அதிகம் என்பது தெரியும் வரை, எது போதும் என்பது ஒருபோதும் தெரியாது.

ஒரு மரத்தை முட்டாள் பார்ப்பதற்கும், அதே மரத்தை அறிவுள்ள ஒருவன் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு.

இப்பொழுது எது நிரூபிக்கப்பட்டதோ, அது ஒரு காலத்தில் வெறும் கற்பனை மட்டுமே.

மனிதனும் மலைகளும் சந்திக்கும்போது மிகப்பெரிய விஷயங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

பார்வையில் ஏற்படும் மாற்றம் அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

நண்பனை மன்னிப்பதை விட ஒரு எதிரியை மன்னிப்பது எளிதானது.

பறவைக்கு அதன் கூடு; சிலந்திக்கு அதன் வலை; மனிதனுக்கு அவனது நட்பு.

அதிகப்படியான வழியானது ஞானத்தின் அரண்மனைக்கு வழிவகுக்கிறது.

காலையில் சிந்தனை செய்; பகலில் செயல்படு; மாலையில் உண்; இரவில் உறங்கு.

முரண்பாடுகள் இல்லாமல் எந்த முன்னேற்றமும் இல்லை.

எப்பொழுதும் உங்கள் மனதில் இருந்து பேச தயாராக இருங்கள்.

தைரியத்தில் உள்ள பலவீனம், தந்திரத்தில் பலமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x