Last Updated : 21 Sep, 2015 11:32 AM

 

Published : 21 Sep 2015 11:32 AM
Last Updated : 21 Sep 2015 11:32 AM

புதிய கார்களுக்கு அச்சாரமிடும் கண்காட்சி

ஆண்டுக்கொரு முறை வரும் தீபாவளி, பொங்கல் பண்டி கையைப் போல ஆட்டோ மொபைல் துறையினருக்கு ஆண்டுக் கொரு முறை நடைபெறும் கண்காட்சி கள்தான் மிகுந்த உற்சாகம் தரும். அதிலும் குறிப்பாக ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடைபெறும் சர்வதேச கண்காட்சி உலகிலுள்ள அனைத்து ஆட்டோமொபைல் உற்பத் தியாளர்களையும் ஈர்க்கிறது.

பிராங்பர்ட் நகரில் நடைபெறுவதால் இது பிராங்பர்ட் மோட்டார் கண்காட்சி என்றே அழைக்கப்படுகிறது.

1897-ம் ஆண்டு பெர்லினில் உள்ள ஹோட்டல் பிரிஸ்டலில் முதல் முதலில் கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது 8 வாகனங்களே கண்காட்சியில் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கண்காட் சியை நடத்துவ தென முடிவு செய்யப் பட்டது. இரண்டாம் உலக போர் நடைபெற்ற ஆண்டில் மட்டும் கண்காட்சி நடைபெறவில்லை. மற்றபடி ஆண்டுதோறும் இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

8 நிறுவன தயாரிப்புகளே இடம் பெற்ற காலம் மாறி இப்போது உலகம் முழுவதிலுமிருந்து 1,000 ஆட்டோ மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இங்கு காட்சிப் படுத்துகின்றன. இம்மாதம் 27-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. 33 கால்பந்து மைதான பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த கண்காட்சியை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிடுவர் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் கண்காட்சியை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியா ளர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக் கின்றனர். இந்தக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்படும் புதிய மாடல்களில் சில விரைவிலேயே இந்திய சாலைகளில் வலம் வரும் என்பதால் கூடுதல் எதிர் பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்திய நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை இங்கு காட்சிப் படுத்தியுள்ளன. ஆட்டோ மொபைல் துறையில் ஏகபோக ஆளுமை கொண்ட அமெரிக்கா மற்றும் சீனாவில் ஏற்பட்டுவரும் மாற்றம் ஆட்டோமொபைல் துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதன் வெளிப்பாடாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

சில காலமாக தேக்க நிலை நிலவி வந்த அமெரிக்காவில் இப்போது மீட்சி ஏற்பட்டு கார் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. அதேசமயம் சீனாவில் இதுவரை வளர்ச்சிப் பாதையில் சென்று வந்த பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்த கண்காட்சி இந்த ஆண்டு பெரிய அளவில் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. அதேசமயம் சில நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று தோன்றுகிறது. இந்தியாவிலிருந்து சுஸுகி அறிமுகப்படுத்தும் பலேனோ சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஸ்விஃப்ட் காருக்கு இணையாக அல்லது அதைவிட ஒருபடி மேலாக இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸா விற்பனையகம் மூலமாக இந்த விற்பனையை நிறுவனம் மேற் கொள்ள உள்ளது. இந்தியாவில் மாருதி நிறுவனத்துக்குப் போட்டியாக விளங்கும் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனமும் புதிய கார்களை இங்கு காட்சிப்படுத்துகிறது.

என் சீரிஸ் என்ற பெயரில் காரை அறிமுகப்படுத்த உள்ளது. 120 என் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்படும் ஹூண்டாய் கார் பின்னர் இந்திய சாலைக்கேற்ப பெயர் மாற்றப்படலாம். பிராங்பர்ட் மோட்டார் கண்காட்சி எஸ்யுவி கார் களுக்கு முக்கிய இடமாக இருக்கும் என்று தெரிகிறது. பெரும்பாலான நிறுவ னங்கள் தங்களது எஸ்யுவி மாடல்களை இங்கு காட்சிப்படுத்துகின்றன.

டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் எப் பேஸ் மாடலை எப்போது அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த கார் ஏற்கெனவே 2014-ம் ஆண்டு ஆட்டோ கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

பிரான்சின் ரெனால்ட் நிறுவனம் தனது நான்காம் தலைமுறை எஸ்யுவி-க்களை இங்குகாட்சிப்படுத்தி அவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் சொகுசு கார்கள் தயாரிக்கும் பல நிறுவனங்களைக் கொண்டுள்ள ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரில் நடைபெறும் இக்கண்காட்சி மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் சி கிளாஸ் கூபே காரை காட்சிப்படுத்தி யுள்ளது. அதேபோல இந்நிறுவனம் எஸ் கிளாஸ் கேப்ரியோலட்டையும் அறிமுகப் படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவ னங்கள் அடுத்த தலைமுறை ஏ4 மற்றும் எக்ஸ் 1 ஆகிய கார்களை அறிமுகப் படுத்தியுள்ளன.

ஃபோக்ஸ் வேகன் நிறுவனம் இக்கண் காட்சியில் டிகுயான் எனும் எஸ்யுவியை காட்சிப்படுத்தியுள்ளது. விரைவிலேயே பிற பிராண்டுகளான பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 மற்றும் ஆடி க்யூ 5 கார்களுக்குப் போட்டியாக இவை இந்திய சாலைகளில் களமிறங்கும் என்று தெரிகிறது.

கோடீஸ்வர கார்களான பென்ட்லி பென்டய்கா, லம்போர்கினியின் ஹரிகேன் ஸ்பைடர், வாக்ஸ்ஹாலி அஸ்ட்ரா, ஆல்ஃபா ரோமியோ குய்லியா, ரெனால்ட் மெகானே ஆகிய தயாரிப்புகள் இங்கு காட்சிக்கு வந்துள்ளன. சொகுசு கார்கள் அதிக அளவில் இடம்பிடித்துள்ளன. அதேபோல சுற்றுச்சூழலுக்குப் பாதிப் பில்லாத கார்களும் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பேட்டரி கார்களின் வரவு நல்லது தானே!.

அமெரிக்காவில் இப்போது மீட்சி ஏற்பட்டு கார் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. அதேசமயம் சீனாவில் இதுவரை வளர்ச்சிப் பாதையில் சென்று வந்த பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனாலேயே இந்த கண்காட்சி இந்த ஆண்டு பெரிய அளவில் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை.

210 புதிய மாடல்

பெராரி 488 ஸ்பைடர் கார் அறிமுகப் படுத்தப்பட்டது. மேற்கூரையை தேவைக் கேற்ப பயன்படுத்தும் வகையில் இந்த கார் வந்துள்ளது. இந்தக் காரின் விலை 2.35 லட்சம் யூரோக்கள். ஆல்பா கியூலியா செடான் ரக மாடலான இந்தக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 307 கிலோ மீட்டாராகும். இதன் விலை 72 ஆயிரம் யூரோக்கள்.

பென்ட்லே பென்டேகா

ஃபோக்ஸ்வேகனின் சொகுசு பிராண்ட் பென்ட்லேயின் புதிய தயாரிப்பு பென்டேகா. எஸ்யுவி ரகத்தில் 12சிலிண்டர் என்ஜினுடன் இது வந்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 301 கிலோமீட்டராகும். ஐரோப்பிய நாடுகளில் இதன் விலை 1.75 லட்சம் யூரோ. அமெரிக்காவில் 2.21 லட்சம் டாலராகும்.

போர்ஷே பேட்டரி கார்

சூழலைக் காக்கும் வகையில் பேட்டரி யில் இயங்கும் கார். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது.

ஓபல் ஆஸ்ட்ரா

ஜெனரல் மோட்டார்ஸின் ஐரோப்பிய பிராண்ட். இதன் ஆரம்ப விலை 17,200 யூரோக்கள். ஏற்கெனவே 30 ஆயிரம் பேர் இந்தக் காருக்கு பதிவு செய்துள்ளனராம்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x