Published : 17 Aug 2015 10:33 AM
Last Updated : 17 Aug 2015 10:33 AM
1928 ஆம் ஆண்டு பிறந்த மாயா ஆஞ்ஜெலோ ஒரு அமெரிக்க எழுத்தாளர். கவிஞர், நடனக் கலைஞர், நடிகை, சிவில் உரிமை ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் பாடகி போன்ற பன்முக திறமை பெற்றவராக விளங்கினார். ஏழு சுயசரிதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
இவை நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளிவந்துள்ளன. இவர் தனது எழுத்துகளில் இனவெறி, குடும்பம் மற்றும் பயணம் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்தார். தலைசிறந்த இலக்கிய பணிக்காக தன் வாழ்நாளில் ஏராளமான விருதுகளையும் கௌரவ பட்டங்களையும் பெற்றுள்ளார்.
நீங்கள் செயல்படாதவரை எதுவும் தானாக இயங்காது.
அனைத்து பெரிய சாதனைகளுக்கும் நேரம் தேவைப்படுகின்றது.
அன்பு செலுத்தாமல் உங்களால் ஒருவரை மன்னிக்க முடியாது.
ஒருவரது மேகத்தில் வானவில்லாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் உங்களுக்கு கொடுக்கமுடிந்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று மன்னிப்பு. எல்லோரையும் மன்னியுங்கள்.
ஒவ்வொரு மனிதனும் திறமையுடனேயே பிறக்கிறான் என்பதை நான் நம்புகிறேன்.
நீங்கள் என்ன கூறினீர்கள் மற்றும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள்; ஆனால், நீங்கள் எப்படி உணரச் செய்தீர்கள் என்பதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
ஆர்வமான செயல்பாடு, வெற்றி, கொஞ்சம் கருணை மற்றும் கொஞ்சம் நகைச்சுவை ஆகியவையே என்னுடைய வாழ்க்கையின் நோக்கமே தவிர வெறும் பிழைப்புக்காக அல்ல.
அன்பு எந்த தடைகளையும் அங்கீகரிப்பதில்லை. அது தடைகளையும் வேலிகளையும் தாண்டி, சுவற்றில் ஊடுருவி முழு நம்பிக்கையுடன் தன்னுடைய இலக்கை அடைகிறது.
உங்களுக்கு எதையாவது பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றுங்கள், உங்களால் அதை மாற்றமுடியவில்லை என்றால் உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள்.
உங்களிடம் ஒரே ஒரு புன்னகை மட்டுமே இருக்கிறதென்றால் அதை நீங்கள் விரும்பும் ஒருவருக்கு கொடுத்து விடுங்கள்.
நாம் சரியான விஷயங்களை விதைக்கவில்லை என்றால், தவறான விஷயங்களை அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT