Published : 10 Aug 2015 10:28 AM
Last Updated : 10 Aug 2015 10:28 AM

டிப்ஸ்: பெண்கள் கார் ஓட்டும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

l பெண்கள் காரை இயக்க அமர்ந்தவுடன், தங்களுக்கு ஏற்றவாறு இருக்கையை சரி செய்து கொள்ள வேண்டும்.

l வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதி, பின் பகுதியை கார் ஓட்டும் போது கவனிக்க உதவும் கண்ணாடி (ரியர் வியூ மிரர்), பக்க வாட்டு கண்ணாடி (சைடு வியூ மிரர்) ஆகியவற்றை தங்களுக்கு வசதியாக சரி செய்து கொள்ளவேண்டும்.

l காரை இயக்குவதற்கு முன்பாக போதுமான அளவுக்கு எரிபொருள் (பெட்ரோல் அல்லது டீசல்) இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பின்பு கியரை நியூட்ரலில் வைத்து இன்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

l இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் முதல் கியரை போட்டு கிளட்ச் பெடலில் இருந்து மெதுவாக காலை எடுக்க வேண்டும். அதே சமயம் வலது கால் மூலமாக ஆக்சிலரேட்டர் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இன்ஜின் அடிக்கடி ஆஃப் ஆவதைத் தவிர்க்கலாம்.

l பொதுவாக கியரை போட்டுவிட்டு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுக்காமல் அல்லது அதன் மீது காலை வைத்தபடி ஓட்டுவார்கள். இதனால் கிளட்சின் செயல்பாடு விரைவில் குறைந்துபோகும். இதனால் கியரை மாற்றியவுடன் கிளட்ச் பெடலிலிருந்து காலை மெதுவாக எடுத்துவிட வேண்டும்.

l நெரிசல் மிகுந்த சாலைகளில் செல்லும்போது முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தங்கள் வாகனத்திற்கும் இடையே சுமார் 10 மீட்டர் இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

தகவல் உதவி

கே.ஸ்ரீனிவாசன்,

தலைமை பொதுமேலாளர் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x