Published : 03 Aug 2015 12:54 PM
Last Updated : 03 Aug 2015 12:54 PM

வெற்றி மொழி: அப்துல் கலாம்

1931-ஆம் ஆண்டு பிறந்த அப்துல் கலாம், இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த கலாம், இயற்பியல் மற்றும் விண்வெளி பொறியியல் படித்தவர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆகியவற்றில் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

ஏவுகணை தொழில்நுட்பத்தின்மீது கொண்ட பற்று மற்றும் ஈடுபாட்டினால் ஏவுகணை நாயகன் என்று அறியப்பட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களைப்பற்றி தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் கொடுத்துள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பல மதிப்புமிக்க விருதுகள் அவரைத்தேடி வந்தன. மேலும், மக்கள் ஜனாதிபதி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

# செயலில் வெற்றிபெற, இலக்கை நோக்கிய ஒரே எண்ணத்துடனான முழு ஈடுபாட்டினை நீங்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

# நமது இன்றைய தினத்தை தியாகம் செய்வதன்மூலம், நமது குழந்தைகள் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும்.

# இந்தியாவில் நாம் மரணம், நோய், பயங்கரவாதம் மற்றும் குற்றம் பற்றி மட்டுமே படிக்கின்றோம்.

# அறிவியல், மனித இனத்துக்கான ஒரு அழகான பரிசு; நாம் அதை சிதைத்து விடக்கூடாது.

# கவிதை என்பது அதிகப்படியான மகிழ்ச்சி அல்லது ஆழ்ந்த வருத்தத்தில் இருந்து வருகின்றது.

# என்னைப் பொறுத்தவரை, மக்களில் இரண்டு வகைகள் உள்ளனர்; இளமையானவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள்.

# மேலே செல்வதற்கு வலிமை தேவைப்படுகிறது; அது எவரெஸ்ட் சிகரத்திற்கு என்றாலும் அல்லது வாழ்க்கையின் உயரத்திற்கானாலும்.

# யார் கடினமாக உழைக்கின்றார்களோ, அவர்களுக்கே கடவுள் உதவி செய்கிறார் என்ற கொள்கை மிகவும் தெளிவானது.

# மாணவர்களுக்கான மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது; மாணவர்களை கேள்வி கேட்க வைப்போம்.

# பொருளாதாரம் சைவமாக மாற என்னை கட்டாயப்படுத்தியது, ஆனால் இறுதியாக நான் அதை விரும்பத் தொடங்கி விட்டேன்.

# இப்போது ஒரு விரலின் கிளிக்கில் கிடைக்கும் தகவல் வளர்ச்சியானது என்னை வியக்க வைக்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x