Published : 08 Jun 2015 11:40 AM
Last Updated : 08 Jun 2015 11:40 AM

புத்தக அலமாரி - 08.06.2015

Title: Preparing for the Behavior-Based Interview

Author: Terry L Fitzwater

Publisher: Viva Books Private Limited

நமக்குத் தேவையான மற்றும் பொருத்தமான வேலையைப் பெறுவதற்காக நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்வது என்பதற்கான புத்தகம் இது. நேர்காணலின்போது, நமக்கான கேள்விகளுக்கு சரியான பதிலையும், நம்மால் கேட்கப்படவேண்டிய கேள்விகளையும் பற்றிய கருத்துகளைக் கொண்டுள்ளது. வெற்றிகரமான விண்ணப்பங்களைத் தயார் செய்வது, நிறுவனம் பற்றிய விரிவான ஆய்வு, நேர்காணலுக்கான செயல்பாட்டு முறைகள், நேர்காணலுக்கு பிறகான தொடர்பு போன்றவற்றைப்பற்றி பேசுகின்றது.

Title: Interview Manual

Author: Abul Hashem

Publisher: Ramesh Publishing House

நேர்காணல் என்றால் என்ன? என்பதில் தொடங்கி, நேர்முகத்தேர்வு தொடர்பான அனைத்து விதமான விஷயங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றது இந்த புத்தகம். பணிக்கான விண்ணப்பம் தொடர்பான தகவல்களும், மாதிரி விண்ணப்பங்களும் எளிதில் புரிந்துகொள்ளும்படி கொடுக்கப்பட்டுள்ளன. பணி, நிறுவனம் மற்றும் தேர்வுக்குழு ஆகியவற்றின் பின்புலத் தகவல்களின் முக்கியத்துவம் பற்றியும் தேர்வுக்குழுவினரை எதிர்கொள்ளத் தேவையான உத்திகள் பற்றியும் பேசுகின்றது. நேர்காணலின்போது நம்முடைய உடை, பேச்சு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விளக்கங்களைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

Title: Sure Success in Interviews

Author: Jayant Neogy

Publisher: Unicorn Books Pvt. Ltd.

குறைவான நேரத்தில் நேர்காணலுக்கு தயாராகும் வகையிலான உத்திகளைச் சொல்லித்தரும் புத்தகம் இது. படிப்பை முடித்து, புதிதாக வேலை தேடுபவர்களுக்கு பயன்படும் அனைத்து விதமான வழிமுறைகளையும் கற்றுத்தருகின்றார் ஆசிரியர். பல்வேறு வகையான நேர்முகத்தேர்வுகள் பற்றியும் அவற்றிற்கிடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமை பற்றியும் பேசுகின்றது. மேலும், ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தை பற்றிய கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

Title: Your First Interview

Author: Ron Fry

Publisher: Pearson Education

இன்றைய கடினமான வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதற்கான வழிமுறைகளையும் பயிற்சிகளையும் சொல்லித்தரும் புத்தகம் இது. வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை எவ்வாறு பெறுவது மற்றும் நமது தனிப்பட்ட திறமைகளை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. குடும்பம், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான தொடர்பின் வாயிலாக வேலை வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் பேசுகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x